9.21.2012

வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா (அரசியல் தலைவர்)




இணையத்தில் வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் பிரபலமடைந்து அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்,சமூகம் சார்ந்த உறுப்பினர்களும் எப்படிப் பார்க்கிறார்கள். அதை தங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் கருதும் அவர்களுடையை மனநிலையை நகைச்சுவையோடு சொல்லலாம் என்ற சிறு முயற்சியே இந்த பதிவு. முதல் முயற்சியும் கூட…
கட்சி தொண்டர் :  தலைவரே இந்த வலைப்பதிவர்கள் தொல்லை தாங்க முடியலை. எதுன்னாலும் எழுதிபுடறாங்க… பத்திரிக்கைல வர்றதுக்குள்ள் நம்மள வறுத்தெடுத்துப் புடறாங்க…

கட்சித்தலைவர்:  டேய் முட்டாள் என்ன அப்படி நினைச்சிட்ட…. நமக்கு இலவசமா வர்ற விளம்பரம்டா அது…?
க.தொண்டன் :  என்னத் தலைவரே... நீங்க கொட்டாவி விட்டாக் கூட அது இதுன்னு எழுதிபுடறாங்க… அவங்கள சும்மா விடக் கூடாது தலைவரே…
க.தலைவர்:  சரி என்னப் பண்ணலாம்…?
க.தொண்டன் :  பத்திரிக்கைன்னாக் கூட போய் அடிச்சி, கொளுத்திப்புட்டு வந்திடலாம். ஆனா இவங்க பேரைக் கூட சரியாக் குடுக்க மாட்டாங்க… வேணும்னா, கலாச்சாரத்தைச் சீரழிக்கும் இண்டர்னெட்டுக்கு தடை விதிக்கணும்னு ஒரு போராட்டம் நடத்தலாமா…?
க.தலைவர் : முட்டாள் அவங்க எழுதுனா…? நாமும் எழுதுவோம்.
க.தொண்டன் : புரியலையே தலைவரே…
க.தலைவர் : உனக்கு எப்படிப் புரியும். டி.வி ரிமோட்டையே ஆப்ரேட் பண்ணத் தெரியாதவன் தானடா நீ… கம்ப்யூட்டர் இண்டர்னெட்லாம் உனக்கு எங்க தெரியப் போவுது. உன்னைல்லாம் வச்சிக்கிட்டு…
க.தொண்டன் : தலைவரே டி.வி ரிமோட்டை விடுங்க… நாம எப்படி எழுதறது…?
க.தலைவர் : பத்திரிக்கைல திட்னான், பத்திரிக்கை ஆரம்பிச்சோம், டி.வில்ல திட்னான் டி.வி ஆரம்பிச்சோம். இப்ப இண்டெர்நெட்ல வலைப்பதிவுல திட்றாங்க… வலைபதிவும் ஆரம்பிப்போம்.
க.தொண்டன் : அதனால நமக்கு என்ன லாபம்…?
க.தலைவர் :  டேய் வலைப்பதிவை ஆரம்பிச்சோம்னா நமக்கு ஓட்டு வரும்.
க.தொண்டன் :  ஆ…! எப்படி…?
க.தலைவர் :   ஆமாம்டா ஒரு வலைப்பதிவை ஆரம்பிச்சு, எழுதறது ஒரு புறமிருந்தாலும், எழுதுறவங்க வலைப்பதிவுகளுக்கெல்லாம் போய் சகட்டு மேனிக்கு பின்னூட்டமிடணும். எந்த பதிவாயிருந்தாலும் நம்முடையது தான் முதல் பின்னூட்டமாயிருக்கணும்.
க.தொண்டன் : எதுக்குத் தலைவரே இந்த வேலை…?
க.தலைவர் : இதுக்குப் பிறகு தாண்டா என் அரசியல் தந்திரமே இருக்குது…
க.தொண்டன் : சொல்லுங்க
க.தலைவர் :  இந்த பதிவையெல்லாம் பிரபலப்படுத்துற திரட்டிகள்னு நிறைய இருக்கு. அதுல ஒவ்வொரு பதிவுக்கும் ஓட்டு சேகரிச்சு, குறிப்பிட்ட ஓட்டு வந்ததும் அதை பிரசுரிக்கிறாங்க…
க. தொண்டன் : அதுக்கு …
க.தலைவர் :  அதனால எல்லாப் பதிவர்களுக்கும் நாம் ஓட்டுப் போடறோம். உலகப் பதிவர்கள் அனைவர்க்கும் ஓட்டுப் போட்டு நாம பிரபலமாகறோம்.
க.தொண்டன் :  நாம எப்பவுமே ஓட்டுப் போட்டதில்லையே தலைவரே
க.தலைவர் : இப்பப் போடறோம்.காரணம் நாம அவங்களுக்குதிரட்டில     ஓட்டுப் போட்டோம்னா அதுக்கு நன்றிக் கடனா பதிவர்கள் எல்லோரும் நமக்குத் தேர்தல்ல ஓட்டுப் போடுவாங்க … எப்டி என் அரசியல்…
க.தொண்டன் :  பதிவுலக அரசியல் சாணக்கியரே வாழ்க வாழ்க…!
க. தலைவர் : டேய் பேசாதடா முதல்ல போய் கூகுள் ஓபன் பண்ணி அரசியல்சாணக்கியன். பிளாக்ஸ்பாட். இன்னு ஒரு வலைப்பதிவை ரிஸ்டர் பண்ணு…
க.தொண்டன் : அய்யோத் தலைவரே …! நமக்கு முன்னமே எவனோ அப்படி ஒன்னு ரிஸ்டர் பண்ணிட்டான்.
க.தலைவர் : எதிர்க்கட்சிக் காரவ தாண்டா இருப்பான்.
க.தொண்டன் : தலைவரே இன்னும் பயிற்சித் தேவையோ….
க.தலைவர் : …………………??????????????? அரசியல்சகுனி.பிளாக்ஸ்பாட்.இன்னு பதிவு பண்றா… பாத்துக்கலாம். பதிவர்களோட ஒட்டு மொத்த ஓட்டும் நமக்குத் தான்.
க.தொண்டன் :  -------------------------------------------------

                                                                                                                                                                                                              கலாட்டா தொடரும்










வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

10 comments:

  1. // வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே//

    பாஸ் மேற்சொன்ன கட்சியில நீங்க ஆளுங்க கட்சியா எதிர்கட்சியா பாஸ்... #எப்புடி

    ReplyDelete
    Replies
    1. என்ன சீனு நம்மள்லாம் ஒரே கட்சி மறந்துட்டீங்களா...

      Delete
  2. இங்கும் கட்சியா ? சரியா போச்சி.

    ReplyDelete
    Replies
    1. கட்சி எனபதும் பயந்துவிட வேண்டாம். வலைபதிவர்கள் எல்லோரும் ஒரே கட்சி. கருத்துக்கள் பகிரும் கட்சி.

      Delete
  3. அடேடே... அரசியல்னா என்னன்னு எனக்குத தெரியாதே... மீ எஸ்கேப்!

    ReplyDelete
    Replies
    1. அரசியல்னா என்னன்னு இங்கு யாருக்குத் தான் தெரியும். தெரியாமத் தான் இத்தனை காலமா அதை செஞ்சிக்கிட்டு இருக்காங்க...

      Delete
  4. மூக்கு பெருசா இருந்தா இப்படித்தான் யோசனை வரும்!!

    இன்னைக்கு மட்டும் தொழிற்களத்துக்கு வராம இரு, பாத்துக்கறேன்,,

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் ஒரு அழைப்பா..? நிச்சயம் வருகிறேன்

      Delete
  5. தமிழ் ராஜா கூடிய விரைவில் வலைபதிவு ராஜா ஆகிவிடுவார் என்று இந்த பதிவை நான் படித்து சிரித்துக்கொண்டே இருந்தபோது, எங்கள் வீட்டு பறவை ஒன்று கூறியது.

    'அப்படியே ஆகட்டும்' என்றேன் நான் மன நிறைவுடன்!

    பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ராஜா!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டிற்கும் பறவையின் சமிக்ஞைக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா...

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts