ரணகளம் என்னுடைய முதல் குறும்படமாக அமைந்துவிட்டது. உண்மையில் குறும்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இருந்தது இல்லை.
ஆனால் என் நண்பனுக்கு உதவ சென்ற நான் குறும்பட இயக்குனராகிவிட்டேன். கல்லூரியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் விளையாட்டாக அங்கு அவனுடன் வேலைப் பார்த்தவர்களுடன் சேர்ந்து ஒரு கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்குரிய அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டான்.
பிறகு என்னை படப்பிடிப்புக்கு இரண்டு நாளைக்கு முன்னர் என்னை படப்பிடிப்பில் வந்து உதவுமாறு அழைத்தான். நானும் சரியென்று சம்மதித்து அவனுடன் சென்றேன்.
கதைக் கரு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அதற்குரிய திரைக்கதையும்,வசனமும் அவரகளிடம் இல்லை என்பது எனக்கு அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது.
இந்த கதையை இயக்கவிருந்த நபரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதாக தெரியவில்லை. மொத்தத்தில் ஆட்களை பிடித்து நிறக வைத்துவிட்டாலே படத்தை முடித்துவிடலாம் என்ற ரீதியிலேயே யோசித்திருந்தனர்.
படப்பிடிப்பு ஆரம்பித்த சில நொடிகளிலேயே என் நண்பனுக்கு நம்பிக்கைப் போய்விட்டது. இரண்டு நாள் தொடர்ந்த பின் கிளம்பலாம் என்று சோர்வுடன் சொன்னான்.
நான் அவனை விடவில்லை. முடிந்ததை எடுக்கலாம் என்று அவனுக்கு ஊக்கமளித்து, இருந்ததை வைத்து ஒரு நல்ல கருத்தைச் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.
அது மட்டுமின்றி என்னுடைய பங்களிப்பைப் பார்த்து, என் பெயரையே இயக்குனராகப் போட்டுவிட்டார்கள். நான் மறுத்தும் கேட்கவில்லை. இப்படி தற்செயலாக அமைந்தால் தான் நாமும் குறும்படம் இயக்க முடியும் போல என்று நினைத்துக் கொண்டேன்.
பல சிக்கல்களுக்கு பிறகு இந்த குறும்படத்தின் டிரெய்லர் உருவானது.இதோ உங்களின் பார்வைக்கு..
நட்புடன்
தமிழ்ராஜா
நான்கு நண்பர்களின் கதையா...? கபடி போட்டியா...?
ReplyDeleteரணகளம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...
நன்றி...tm2
நான்கு நண்பர்கள் தான் கபடி போட்டியெல்லாம் இல்லை. அது மட்டும் திரையிட்ட பிறகே பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.
Deleteஉங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றீ நண்பரே
Deleteவெற்றியடைய வாழ்த்துக்கள்! கூடிய சீக்கிறம் நெடும்படம் இயக்கவும் வாழ்த்துக்கள்! அப்டி ஏதாவது நெடும் படம் இயக்கினாலும் பதிவு போடனும்! அப்பத்தான் எனக்கு பாட்டுப்பாட சாண்ஸ் கேக்க முடியும்:)))
ReplyDeleteநிச்சயம் பதிவு போடுவேன். உங்களுக்கான வாய்ப்பிருந்தால் நிச்சயம் உங்களை பாட அழைப்பேன். வாழ்த்திற்கு மிக்க நன்றி
DeleteVazhthugal Raja!
ReplyDeleteஉன் வாழ்த்துக்கு மிக்க நன்றி சத்யா...
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி அனந்து...
Deleteராஜா மன்னிக்கவும்.. இந்த பதிவு இப்போது தான் பார்கிறேன்.. வாழ்த்துக்கள்!! உங்களை வெள்ளி திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன்...
ReplyDeleteசமீரா உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றீ.நிச்சயம் உங்களின் ஆவல் வெகு விரைவில் நிறைவேறும்.
Delete