10.19.2012

கங்கை நீர் புற்று நோயை உண்டாக்கும்!: ஆய்வு




இதைப் பற்றிய ஒரு பதிவை நான் ஏற்கனவே என் வலைத்தளத்தில் எழுதியிருந்தாலும் , இது அவசியம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு என்பதால், என் தளத்தில் பகிர்கிறேன்

புதுடெல்லி:புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.

இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றன்ர்.

அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால்,அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.

இந்நிலையில், இந்த அளவுக்கு மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.


தேசிய புற்றுநோய் பதிவு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே இத்தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறப்பகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனமும்,குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.


Source: http://news.vikatan.com/?nid=10838#cmt241
நட்புடன் 
தமிழ்ராஜா

8 comments:

  1. ஆய்வுகள் கூறினாலும் மக்கள் மாறுவது போல் தெரியவில்லை...

    நன்றி...
    tm2

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மாறும் நண்பரே... மக்களிடம் கொண்டு செல்ல இந்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை. காரணம் ஓட்டு வாங்க வேண்டும்.

      Delete
  2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எனும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது...
    பக்தி இருக்க வேண்டியது தான் அது கண்மூடி தனமாக ஆகும் போது அது நம்மையே அழிக்கிறது.
    வேதம் அனைவருக்கு சொல்லுவது அன்பு தூயிமை நம்பிக்கை நேர்மை இவற்றைத்தான்.. ஆனால் நாம் தான் அதை மிகை படுத்தி நம்மை நாமே அதற்க்கு இறையாக்கிகொல்கிறோம்...

    நல்தொரு பகிர்வு ராஜா... ஆனாலும் மக்களிடம் மண்டிகிறக்கும் மூடபழக்கம் மற்றும் அறியாமை விழிப்பது சற்று கடினமே.....

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள் சமீரா, இருந்தும் மக்களிடம் மண்டிக்கிடக்கும் மூடப்பழக்கத்திற்கு முக்கிய காரணம் அரசியலும்,தொடர்பு சாதனங்களூம் தான். அவர்களின் மூடப் பழக்கங்களை காசாக்கி ஆதாயம் காண்கின்றனர்.

      Delete
  3. புனித கங்கை மனிதக் கழிவுகளின் உரைவிடமாகிவிட்டதே!! காலத்தின் கோளம்!

    tm4

    ---
    www.sudarvizhi.com


    ReplyDelete
    Replies
    1. என்ன செயவ்து கங்கையை புனிதமாக்கியதே மனிதர்கள் தான். அந்த மனிதர்களே அதன் புனிதத்தை அழித்துவிட்டனர்.

      Delete
  4. இதே விஷயத்தை வினவு விமர்சனக் கண்ணோட்டத்துடன் எழுதியிருந்தது. நீங்கள் செய்தியாகவும் தகவலாகவும் பகிர்ந்திருக்கிறீர்கள்! எப்படியோ எல்லோரும் அறிந்து கொண்டால் நல்லது தான்.இண்டஸ்ட்ரீகள் சில நதிகளை நாசம் பண்ணின; இந்துக்களின் நம்பிக்கை என்ற பெயரில் முக்கிய நதியையும் நாசம் பண்ணி விட்டோம். இனியாவது விழித்துக் கொண்டால் சரி. அதெல்லாம் கடவுள் காப்பாற்றுவார் என்று நாமே நஞ்சாக்கிய நதியில் மறுபடியும் மறுபடியும் விழுந்து குளித்து இந்துக்கள் பலரும் புற்று நோயை வரவழைத்துக் கொள்ளாமலாவது இருந்தால் சரி. வேறென்ன சொல்வது? நன்றி! - சோ.சுப்புராஜ்

    ReplyDelete
    Replies
    1. மக்கள் உருவாக்கிய நாசத்தை அவர்களே சரி செய்வது தான் இதற்கு சிறந்த தீர்வு.உடனடியாக இந்த சடங்கு சம்ப்ரதாயஙகளையெல்லாம் நிறுத்துவதே நாம் கங்கைக்கு செய்யும் உதவி.

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts