10.24.2012

மாற்றானும் கே.வி.ஆனந்தின் குழப்பமும்





   மாற்றான் பல விமர்சனங்களை இணையத்தில் பெற்று மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சியைத் திறந்தால்,அனைத்து சேனல்களிலும் சூர்யா நம் கண் முன் வந்து மாற்றானில் தானும் மாற்றான் குழுவும் சந்தித்த சவால்களை சொல்கிறார்கள்.
       இதைப் பார்த்த என் வீட்டிலும் இயக்குனர், நடிகர்,நடிகைகள் மற்றும் அந்த குழுவே மிகவும் உழைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆம் எல்லோருமே நன்றாகத் தான் உழைத்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையில் அந்த உழைப்பு மிகவும் அரிதாக இருப்பதை நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். அதற்கு காரணங்களும் சொல்லிவிட்டார்கள்.
     இது எல்லாம் இந்த படம் வெளியானப் பிறகு வந்த செய்தி. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பெரும்பாலான உதவி இயக்குனர்கள் இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றிப் பெறாது என்று சொன்னார்கள். சரியாக ஏப்ரல், மே மாத வாக்கில் வந்த அந்த செய்தி தான் அதற்கு காரணமாக அமைந்தது.
           கே.வி.ஆனந்த மாற்றான் படப்பிடிப்பில் ஒரு உதவி இயக்குனரை செருப்பை எடுத்துக் கொண்டு துரத்தி துரத்தி அடித்தார் என்பது தான் அந்த செய்தி. இந்த செய்தி எந்தளவு உண்மை என்றுத் தெரியவில்லை. ஆனால் இதை கேள்விப்பட்ட என்னுடன் பணிச் செய்துக் கொண்டிருந்த உதவி இயக்குனர்கள் உடனே சொன்ன வார்த்தை, படம் ஓடாது. இங்கே அவர்கள் உணர்ச்சிவசப்பட்டது நியாயமா..? இல்லையா…? என்று எனக்குத் தெரியவில்லை.
           ஆனால் திரைப்படம் வெளியாகி முதல் நாள் அந்தப் படத்தை நான் பார்க்கையில், அவர்கள் சொன்னது எத்தனை உண்மை என்பது எனக்குப் புரிந்தது. எல்லா மனிதனுக்கும் கோபம் பொது தான் ஆனால் ஒரு உதவியாளரின் மேல் தன் கோபத்தை காட்டுவதில் இத்தனை நாகரிகமற்ற செயலை கே.வி.ஆனந்திடமிருந்து யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
       இதற்கெல்லாம் காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான். அது உங்களுக்கு படத்தைப் பார்க்கும் பொழுதே தெரியும். ஒரு மிகப் பெரிய படம் கிடைத்துவிட்டது என்றதும், திரைக்கதையைப் பற்றிக் கவலைப்படாமல் சென்றால், இப்படித் தான் படப்பிடிப்பிம் நிகழும். இது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல தன் கோபத்தை, எதிர்ப்பைக் காட்ட முடியாதவர்கள் மேல் கொட்டும் அனைத்து மனிதர்களுக்கும் நிகழும் சறுக்கல்.

நட்புடன் 
தமிழ்ராஜா


8 comments:

  1. /// இதற்கெல்லாம் காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான். ///

    உண்மை...

    சூர்யாவின் உழைப்பு வீணாகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே, இப்படித் தான் பலப் பேரின் உழைப்பு திரைத்துறையில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் வீணாகிறது

      Delete
  2. உருவாக எத்தனை காலம் பிடித்திருக்கும் கோபத்தால் நசிந்ததா ? அடடா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோபம் எவ்வள்வு பெரிய வியாதி என்று யாரும் அறிவதில்லை

      Delete
  3. இது எனக்கு தெரியாது... புது படங்கள் அதிகபட்சம் நான் பார்ப்பதில்லை. ஆனால் விமர்சங்கள் படிப்பேன். சூரிய விற்கு இது ஒரு தோல்வி படம் தான். அதை மறைக்க தானோ என்னவோ அதிகமாக தொலைகாட்சிகளில் வந்து அதை வெற்றி படமாக காட்ட முயற்சிக்கிறார்கள்...

    கோபத்தை கட்டுபடுத்தவேண்டும்.. அதிலும் உயர்ந்த இடத்தில இருபர்களுக்கு மிகவும் அவசியம்...

    ReplyDelete
    Replies
    1. கோபத்தை கட்டுபடுத்துவதில் தான் நாம் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களா...? இல்லையா என்பதே நிர்ணயிக்கப்படுகிறது.

      Delete
  4. இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாள்னு கேள்விப்பட்டேன்! எல்லாம் தோழி சமீரா சொல்லித்தான்! வாழ்த்துக்கள்! எல்லாம் வள்ள இறைவன் தங்களுக்கு நலமும் வளமும் தந்தருள வெண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சுடர்விழி அவர்களே உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts