• 10.21.2012

  கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (7)
  உன்னுடைய எடையறிய
  நீ நின்ற இயந்திரம்
  ஏனோ ! உன் எடையை
  மட்டும் காட்ட மறுத்தது.

  தெரியவில்லை அந்த இயந்திரம்
  கூட உன் எடையை
  வெகு நேரம் சுமக்க
  ஆசைக் கொள்கிறதோ
  என்னவோ…?


  உடலில் நீர்த் தன்மை வற்றிவிடாமல்
  தாகமெடுக்கையில் அடிக்கடி
  நீர் அருந்தி இதயத்தை பாதுகாப்பது
  போல் தான்
  எனக்குள் காதல் வற்றிவிடாமல்
  இருக்க உன்னை அடிக்கடி நினைத்து
  எனக்குள் இருக்கும் உன்னை
  காதலுடன் பார்த்துக் கொள்கிறேன்.

  நட்புடன் 
  தமிழ்ராஜா