நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்த்துவிட்டேன். இருப்பினும்
அதைப் பற்றி எழுத இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. அதான் ஒரு வாராமா நிறைய படித்துவிட்டோமே
நீ என்ன மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு இங்கே நான் சொல்லிக்
கொள்வது இது விமர்சனமல்ல… இது ஒரு விவாதம்.
பீட்சா இந்தப் படத்தை
பற்றித் தான் இன்று நிறைய ரசிகர்கள் பேசுகிறார்கள். சினிமா வட்டாரத்திலும் இதைப் பற்றிய
பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. பீட்சா எப்படி இருக்கு என்று ஒருவரிடம் அந்தக் கதையைப்
பற்றிக் கேட்டாலும் முதலில் அதை சென்றுப் பார்த்துவிட்டு வாருங்கள். கதைக் கேட்டால்
உங்களுக்கு பார்க்க பிடிக்காது என்று தான் சொல்கிறார்கள். திரைத்துறையினரோ, குறும்படத்தின்
கதையை வெகு அழகாக சொல்லிவிட்டார் என்று சொல்கிறார்கள். மொத்தத்தில் இந்தப் படத்தைப்
பற்றிய பிரமிப்பு எல்லோரிடமும் இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்,
மக்களின் புத்திசாலித்தனத்திற்கும், ரசிப்புத்தனத்திற்கும் அச்சம் என்ற செக்கை வைத்து
திரைக்கதையை அழகாக நகர்த்தியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் கேமராவையே கதாநாயகனாக்கி,
ஒரு டார்ச் லைட்டை வில்லனாக்கியிருக்கிறார். ஆம் படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி தான்
மக்களின் கவனத்தை மிகவும் ஆக்ரமித்தது. அது விஜய் சேதுபதி ஒரு பங்களாவுக்குள் மாட்டிக்
கொண்டு திணறும் பகுதி. திரைக்கதையில் துணிச்சலை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு பயமுறுத்தலில்
கைத் தட்டல் பெற்றுவிட்டார் இயக்குனர்.
விஜய் சேதுபதி நம்மளை
பயமுறுத்த எத்தனை மெனக்கெட்டிருக்கிறார். நடிகருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.ரம்யா
நம்பீசன் ஆரம்பத்தில் சில இடங்களில் ரொமான்ஸ்க்கு மட்டும் தான் வருகிறார் என்று நினைத்தால்,
இறுதியில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். ஒரு சில கதாப்பாத்திரங்கள் கொண்டே காட்சிகள் மூலம்
நிறைவான கதையை சொல்லியிருக்கிறார். இறுதி முடிவு மட்டும் குறும்படத்தின்
முடிவு போல் உள்ளது என்று நிறையப் பேர் சொன்னார்கள்.
இசையில் சந்தோஷ் நாராயணன்
தன்னை நிரூபித்துவிட்டார். படத்தொகுப்பு லீயோ ஜான் பால், பார்த்து பயந்தவர்களின் முகங்களே அதற்கு சாட்சி.
இந்தப் படத்தில் இயக்குனர்
துணிச்சலாக முயன்றிருப்பது, என்னவென்றால் மக்களின் மறதியின் சக்தியை வைத்தே இந்த படத்தை
வெற்றியடைய செய்திருக்கிறார். ஏனென்றால் முதல் காட்சியிலேயே ரம்யா நம்பீசனின் வாயால்
கதை நமக்கு சொல்லப்பட்டு விடுகிறது. இருப்பினும் நான் விசாரித்த வரையில் யாரும் அதை
கவனிக்கவில்லையென்று தான் சொல்கிறார்கள். அது போல் மக்கள் எந்த இடத்திலெல்லாம் கவனிக்க
மாட்டார்கள் என்று இயக்குனர் நினைத்தாரோ அது பீட்சாவில் அப்படியே நிகழ்ந்து திரைக்கதையை நகர்த்த சாத்தியமாகியிருக்கிறது.
இதற்கு மேல் இதைப் பற்றி
சொல்லக் கூடாது. ஏனெனில் இன்னும் படம் பார்க்காதவர்கள் தங்களின் நினைவாற்றலை சோதித்துக்
கொள்ள இந்த படத்தை பாருங்கள். மறதியிருந்தால் நீங்கள் பயப்படுவீர்கள். இல்லையென்றால்
படத்தில் இருந்து வெளியேறுவீர்கள். வெளியேறிவர்கள் இது வரை யாருமில்லை.
பிளாகிங் வேர்ல்ட் முழுக்க சூடேரிக்கொண்டே வருது பீட்சா விமர்சனங்கள்..பார்க்கதான் எனக்கு இன்னும் டைம் கிடைக்கலங்க.கண்டிப்பா பார்த்திடுவேன்.உங்க விமர்சனம் நல்லாருக்கு.ரொம்ப நன்றி.
ReplyDeleteஅவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.
Deleteஉங்களின் கருத்துக்களை கேட்ட உடனே படத்தை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது.நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்
ReplyDeleteபாருங்கள் ... பார்த்துவிட்டு படத்தைப் பற்றி சொல்லுங்கள்
Deleteஇன்னும் இருக்கிறார்கள் இந்த படத்தில் இருப்பவர்களை போல பயந்தவர்களும் அதை சாதகமாக்கி பயம் காட்டுபவர்களும் நல்ல படம் நானும் பார்த்தேன் ஆனால் எல்லோரும் இந்த கோணத்தில் பார்ப்பார்களா என்பது ஐயம்தான் உங்கள் விமர்சனம் புதுமை நண்பா
ReplyDeleteஆம் நம்மிடையே இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டு தானிருக்கிறார்கள். உங்களீன் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Deleteஉங்களின் விமர்சனம் வித்தியாசமாக உள்ளது...
ReplyDeleteநன்றி...
tm2
உங்களின் பின்னூட்டம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே
Deleteஅப்படின்னா நானும் படம் பார்த்துவிட்டு சொல்லணும் போல இருக்கே.. புது படம் அர்த்த பழசான பிறகு தான் எனக்கு பார்த்து பழக்கம்... ஹ்ம்ம் இந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் நிச்சயம் பார்க்க வேண்டும்..
ReplyDeleteநிச்சயம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் தோழி
Deleteபடம் பார்த்தேன். மிக நல்ல முயற்சி. எனக்கு தோன்றிய சில சந்தேகங்கள்
ReplyDelete1 . பூட்டியிருந்த வீட்டிலிருந்து எப்படி பிசா ஆர்டர் வரும் ?
2 . அப்போ ஆர்டர் செய்தது யார்?
3 . 2 கோடி ரூபாய் வைரம் பறிகொடுத்தவர் அந்த அட்ரசை பில்லில் செக் செய்யாதது ஏன் ?
4 . ஹீரோவினை மறைமுகமாக பாலோ செய்யாதது ஏன்?
விஜயன்
உங்களின் கேள்வி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இருப்பினும் எனக்குத் தெரிந்த பதிலை அளிக்கிறேன். அதற்கு மேல் அது இயக்குனர் கற்பனையில்...
Delete1 . அந்த வீட்டில் இருந்து பீசா ஆர்டர் வரவில்லை. தவறுதலாக விலாசம் மாறிச் சென்றுவிட்டதாகவே கதாநாயகன் ஓனரிடம் சொல்கிறார்.
2.யாருமே ஆர்டர் செய்யவில்லை. கதாநாயகன் தவறுதலாக வீடு மாறிசென்று விட்டேன் என்று சொன்னப் பொய்யில் எல்லாமே அடங்கி விடுகிறது.
3. கதாநாயகன் சொன்னப் பொய்யால் இது அவசியமற்றதாகிவிடுகிறது.
4 இறுதிக் கேள்வி மட்டும் தான் ஏன் என்று தெரியவில்லை. இயக்குனர் வேண்டாமென்று நினைத்தாரோ என்னவோ...இங்கே தான் லாஜிக் இடிப்பது போல் உள்ளது.
இருப்பினும் பார்க்கும் பொழுது தோன்றவில்லை. உங்களுக்கு தோன்றியிருந்தால் நான் சொன்ன 10 சதவீதத்தில் நீங்களும் ஒருவர்.