மனதிலிருந்து எந்த நினைவுகளையும்
அழித்துவிட முடியாது
என்று சாலையைக் கடக்கையில்
உன்னைக் கணடதும்
தான் தோன்றியது.
இரண்டு வருடங்களுக்கு முன்
இதே சாலையில் கைக்கோர்த்தபடி
நடந்த அந்த இரு உருவங்கள்
பளிச்சென மின்னல் போல்
என் மனக்கண் முன் வந்துப் போனது
அதே உருவங்கள் தான் இன்றும்
வேறு ஒரு பரிமாணத்தில் மாறி
உலகில் உலவிக் கொண்டிருப்பதாய்
எனக்கு எண்ணத் தோன்றியது.
என் சிந்தனையை சட்டென
உனதுப் பார்வை கலைத்துப் போட்டது.
நீ என்னைப்
பார்த்தப் பார்வையில்
உன்னைப் பற்றிய எந்த உணர்வும்
வெளிப்பட்டுவிடக் கூடாதே என்ற
அச்சஉணர்வு உனக்கிருப்பதை
என்னால் உணர முடிந்தது.
அந்தப் பார்வையை விலக்காமல்
என்னருகில் வந்து
நின்றாய்
பழைய நினைவுகளின்
எந்த சுவடுமின்றி
நிகழ்வில் ஒரு வார்த்தையை
பிரயோகிப்பது எத்தனை கடினம்
என்பதை அந்நொடி தான் உணர்ந்தேன்
ஏனெனில் அந்த முயற்சியில்
நானும் தோற்றேன் நீயும் தோற்றாய்
உனது விழியும் எனது விழியும்
சந்தித்துக் கொண்ட அந்த தருணம்
மட்டும் எதுவும் பேசாமல்,
எதையும் கேட்காமல் அந்த நொடிகள்
கடந்துவிடக் கூடாதாயென்று
மனம் துடித்தது.
வாகனங்களின் சத்தத்திலும்
உனது சுவாசக்காற்றின் துடிப்பை
என்னால் உணர முடிந்தது.
என்ன தான் நாம் பேசிவிட முடியும்
என்றெண்ணுகையில் தான்
எதிர்ப்பார்க்காத ஒரு கேள்வியை
கேட்டாய் நீ
நல்லாயிருக்கீங்களா…?
வேண்டாம் நான் பொய்
சொல்ல மாட்டேன் என்றதுக்கு
எனக்கு வரும் என்று
சொன்ன நீ
நல்லாயிருக்கிறேன்
உன் நினைவுகள் இல்லாமல்
உன் கனவுகளும் இல்லாமல்
யாருடனோ எங்கையோ
என்றாய்…
மனதின் ஒட்டு மொத்த வலிகளும்
ஒரு வரியில் சரியாகி விட முடியுமா…?
என் விழிகள் அவளின் விழிகளை
நேருக்கு நேர் சந்தித்தது
கண்ணீர் மலர்கள் அவள் விழிகளில்
மலர்ந்து கன்னத்தின் வழியே
உதிர்ந்துக் கொண்டிருந்தது.
அந்த சாலையின் ஓரத்தில்
உன் கரங்களைப் பற்றி
உண்மை சொல்லட்டுமா என்றேன்
நீயும் தலையை ஆட்டினாய்
எனக்கு சர்க்கரை இனித்து
இரண்டு வருடமாகிறது. என்றதும்
நீ லேசாக நகைத்தாய்
உன் கரங்கள் என் கரத்தை
அழுத்தமாய் பற்றியது
இனி இனிக்கும் என்று
கன்னத்தில் இருந்த ஈரத்தைத்
துடைத்தபடியே சொன்னாய் நீ
/// பழைய நினைவுகளின்
ReplyDeleteஎந்த சுவடுமின்றி
நிகழ்வில் ஒரு வார்த்தையை
பிரயோகிப்பது எத்தனை கடினம்
என்பதை அந்நொடி தான் உணர்ந்தேன் ///
உண்மை...
நன்றி...
tm2
உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட வரிகள் நிறையப் பேரி வாழ்வில் நிகழ்ந்திருக்கும்
Deleteஇனிக்கிறது...
ReplyDeleteபாராட்டிற்கு மிக்க நன்றி
Deleteஉணர்வுகளின் சங்கமத்தில் கலந்து படித்து வந்த எனக்கு கடைசி வரியைப் படித்ததும் எனக்கும இனிக்கிறது. உங்களின் சொல்லாடல் அற்புதம் ராஜா.
ReplyDeleteஉங்களிடமிருந்து இப்படியொரு பாராட்டைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி ஐயா.
Deleteநல்லாயிருக்கிறேன்
ReplyDeleteஉன் நினைவுகள் இல்லாமல்
உன் கனவுகளும் இல்லாமல்
யாருடனோ எங்கையோ
என்றாய்…
நிகழ்வுகளை படம் பிடித்து காட்டிய வரிகள் அருமை.
அந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு பாராட்டிய சகோதரிக்கு மிக்க நன்றி
Deleteஎன்ன.. ராஜா திடீர் சோகம்...
ReplyDeleteபிரிவின் வலியையும் மீண்டும் சந்திக்கும் போது உணர்சிகளின் தாக்கத்தை அழகாக பதிவு செய்து இருக்கீங்க... உண்மையில் இது பல பேருக்கு நிகழ்ந்து இருக்கும்!!!
பலப் பேருக்கு நிகழ்ந்தது என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே தோழி. எல்லோர் மனதிலும் உள்ளது தான் என் எழுத்தின் மூலம் சில வெளிப்பாடு அவ்வளவே
Delete