• 2.24.2013

  குடும்பமலரில் (தினத்தந்தி) என்னுடைய குறும்படச் செய்தி


  வாசக நண்பர்களே...

             அனைவர்க்கும் முதலில் என் மன்னிப்பைக் கூறிக் கொள்கிறேன். ஏனெனில் சில நாட்களுக்கு முன் என்னுடைய குறும்படச் செய்தியைப் பற்றி (டெக்கன் கிரானிகல்) வந்தப் பொழுது, அதில் 14-01-2013 அன்று இணையத்தில் வெளியிடுவதாக அறிவித்திருந்தோம். அதன் பிறகு சில காரணங்களால் அது தள்ளிப் போடப்பட்டது. அது மட்டுமின்றி அதன்  மூலம் வந்த ஒரு திரைப்பட வாய்ப்பினாலும் உங்களுக்கு என்னுடைய குறும்படத்தை பற்றிய செய்தியை தெரிவிக்க இயலாமலேயே போய்விட்டது.
               கடந்த ஒரு மாதக்காலமாக இணையம் பக்கமே அவ்வளவாக வர இயலாமல் போனதால், நண்பர்கள் வலைத்தளங்களுக்கு சென்று கருத்துக்கள் ஈடுவதும் குறைந்துவிட்டது. நண்பர்கள் அதற்கும் என்னை மன்னிக்க வேண்டும். 

              இப்பொழுது என்னுடைய இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.  என்னுடைய முதல் குறும்படமான ரணகளம் பற்றிய செய்தி இன்றைய 24-02-2013  தினத்தந்தி  நாளிதழில்  குடும்பமலரில் வெளிவந்திருக்கிறது.இதன் பிறகு அந்த குறும்படத்தை ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிப்பரப்பவும் கேட்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் முடிவாகிவிடும். அதன் பிறகே இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதால் ரணகளம் குறும்படத்தை மார்ச் மாத இறுதியில் இணையத்தில் வெளியிட வாய்ப்பிருக்கிறது என்று வலைத்தள நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
  நட்புடன் 
  தமிழ்ராஜா