12.18.2007

என்னை மீட்டுக்கொடு

என்னை மீட்டுக்கொடு!















உன் துப்பட்டாவால் நான் விழுந்தேன்
அன்பே என்னை தூக்கி விடு!
உன் இருவிழி பார்வையில் எனை மறந்தேன்
அன்பே என்னை மீட்டுக்கொடு!
ஓருயிர் தானே எனக்குள் இருப்பது
இருயிர் சுமக்க இதயத்தில் இடமெது
கருவினில் கூட இருயிர் தோன்றும்
என் இதயத்தில் என்றுமே ஓருயிர் தான்
அதுவும் என்றும் உன்னிடம் தான்




உன் கண் இமைக்குதே
எனை சிறை வைக்குதே
உன் இதழ் திறக்குதே
அது கவி படைக்குதே
நீயும் புன்னகைக்கையில்
என்னுயிர் மறுப்பிறப்பெடுக்குதே.............








காதல் சுடுமோ! கண்ணீர் வருமோ!
கனவும் நினைவும் கவலையை தருமோ!
மறதியும் மனதில் மறைவின்றி எழுமோ!
முற்களின் வலியை பூக்கள் தருமோ!
சொற்களும் சுமையாய் நெஞ்சினில் விழுமோ!
என்னவளே!
அடி என்னவளே!
ஒரு சொல் சொன்னாய் என் நெஞ்சுள்ளே........
வாழ்ந்தது போதும் என்று நினைப்பது போல்........








என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்.................
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!



12.17.2007

உண்மையடி நீ எனக்கு


ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னை பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!


அழைத்து செல்வாயா ?
வேகமேடுக்கும் உன்
விழிகளின் பார்வையில்
என் நினைவுகளையும்
சேர்த்து அழைத்து செல்வாயா?
உன் உள்ளத்தில் பயனியாக
வர அனுமதி கேட்கிறேன்
பாலைவனத்தில் தனியாக சிக்கி
தவிக்கும் நான்
வழியுமின்றி விழியுமின்றி
கிடக்கிறேன்
அழைத்து செல்வாயா ?
உன் நீண்டநேசப் பயணத்தில்.......................



என்னுயிர் நின்று விடும்

உன் உள்ளத்துப் பயணியாக
வந்த என்னிடமே செல்ல
வழி கேட்கிறாயே பெண்ணே!
எங்கேயாவது செல்................
பயணத்தை நிறுத்தி மட்டும்
விடாதேஎன்னுயிர் நின்று விடும்.........



அதிசயம் தானே நான்..

சாவையருகில் பார்த்ததாக பலர்
சொல்லியிருக்கிறார்கள்
நானோ சாவையே பார்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ உள்ளே வந்தாயே அந்நொடியே
என்னுயிர் பிரிந்து விட்டது
இருந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பெண்ணே ! அதிசயம் தானே நான்.....................

12.13.2007

அம்மா! அம்மா! அம்மா!


ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்த குரலில் கலந்து வரும்
உரிமையை உணர் வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை
உன் விரல் பட்ட உணவில்
தான் நான் உயிர் வளர்த்தேன்
உன் இதழ் சிந்திய வார்த்தையை
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்
உன் சுவாசத்தில் கலந்த காற்றை
சுவாசித்து தான் வாழ்ந்திருக்கேன்
முதல் நடந்திடும் நான்
விழுந்தது உன் மடியில்
முதல் மொழியினை நான்
உணர்ந்தது உன் இதழில்
முதல் கலங்கிடும் விழிகளை
துடைத்தது உன் உடையில்
முதல் சிரிப்பினை பழகியது
உன் முகத்தில்
கண்ணாடிப் பார்க்கும் வரை
என் அத்தனை முகங்களும் நீயே
உன் முன்னாடி இருப்பதை விட
வேறு இன்பமில்லை தாயே
என் நிர்வானத்தை முதலில்
களைத்த நீயே
நீல வானத்தையும் காட்டி
வளர்த்தாய் தாயே
மூச்சு விடும் இடைவெளியிலும்
உன் அன்பு எனை
விட்டு விலகியதில்லை
நீ காட்டி வளர்த்த
ஒவ்வொரு பொருளும்
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை
கையெடுத்து நீ கும்பிடச்
சொன்ன தெய்வமோ
எனக்கு தலை சீவிவிட்டதில்லை
நானும் பொய்யுரைத்தப் பொழுதும்
கூட நீ எனை அடித்ததில்லையே
குளிப்பாட்டி விடும் உன் கைகளில்
அடி வாங்கஅடம் பிடிப்பேன்
உன்னிடம் அடி வாங்காமல்
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை
என்பேன்
கிறுக்கித் தான் அம்மா
உன் கைகளை பிடித்து
எழுத துவங்கினேன்
அன்பை சுருக்கி வாழும்
இதயங்களின் நடுவே
உறவுகளை பெருக்கி வாழும்
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்
அணுஅணுவாய் என் வளர்ச்சியை
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய்
என்றைக்கும் உன் சேலை நுனி தான்
என்னுடைய கை குட்டை
உன் முகமே நான் முகம் பார்த்து
தலை சீவும் கண்ணாடி
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே
நான் விரும்புகிறேன் தாயே
சட்டை பையில் கை விடும் பொழுதெல்லாம்
எனக்கு தெரியாமல் நீ
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும்
அந்த சுகம் இன்று எந்த
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை
உன் விரல் நுனியின் சுவையை
எந்த நட்சத்திர ஹோட்டலிலும்
உணர்ந்ததில்லை
உன் மடியின் சுகத்தை எந்த
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ......... அம்மா!
சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை




அம்மா !உன் நினைவுகள்





உன் நினைவுகள் படாத
ஒரு பொருளை வீட்டில்
என்னால் காட்ட முடியாது அம்மா!
நீ கட்டிய சேலை
என் தலையணையாக மாறியது.
நீ என் கையைப் பிடித்து
கற்றுத் தந்த மொழிகள்
இன்று கவிதைப் படைக்கிறது
நீ முதன்முதலில் வாங்கிய
உப்புக்கான டப்பாவைப் பார்க்கையில்
உன் கைகளின் சுவை
இன்றும் நாவில் நிற்கிறது
நீ சொல்லித் தந்தபடி
நான் விதைத்த கத்திரி
இன்று நம் வீட்டுக் குழம்பில்
கமகமக்கிறது.
இப்படி வீட்டில்
நீ கட்டிய பந்தலில்
வளர்ந்த அவரக்காய்,மல்லிப் பூ.
வளருமா? என்று நினைத்த வாழைமரம்
என எல்லாவற்றையும் நம்
வீட்டிற்கு வருபவர்களிடம்
நான் காட்டுகிறேன்.

உன் அம்மா எங்கே? என்பவர்களிடம்
இதோ என் அம்மாவென்று
உன் புகைப்படத்தைக்
காட்டவைத்துச் சென்று விட்டாயே!
அம்மா !

11.29.2007

கவிதை! இன்பக்கவிதை!

கவிதை எழுத வருமா !
என் மனது முழு அமைதி
இன்று பெருமா!
சோர்வில் மிதந்து கிடக்கும்
என்னுள்ளம் இன்ப குளியல் கொள்ளுமா!
காற்று சுகமிருந்தால் உள்ளே
சுவாசத் தடங்களிருக்கு
சுவாசம் ஒழுங்கடைந்தால்
வெளியே காற்று அடங்கி இருக்கு
மலர்ந்த கனவுக்கெல்லாம் என்
மனம் வாடகை கேட்டிருக்கு
இன்று மனமே வாடகையாய்
கனவில் புழூங்கியிருக்கு..........
தூக்கம் எனக்கிருந்தால்
இப்படி ஏட்டில் கிறுக்கலில்லை
ஏட்டில் கிறுக்குவதால் என்மனம்
தூக்கம் கொண்டதில்லை
துக்கம் எனக்கிருந்தால் அதை
ஏட்டில் இறக்கியிருப்பேன்
மன வாட்டம் போக்கியிருப்பேன்
விழி தூக்கம் கொண்டிருப்பேன்
துக்கமில்லை தூக்கமில்லை
எதுவுமின்றி நான் சோர்ந்து கிடக்கிறேன்
நெஞ்சம் வேர்த்துக் கிடக்கிறேன்
கண்ணீர் கோர்த்து கிடக்கிறேன்
கவிதையில் பூத்துக் கிடக்கிறேன்
சோற்று பருக்கைத்தனை வாயில்
போட்டுக் கொண்டப் பொழுது
உழவன் வாட்டம் என் மனதில்
தாக்கம் கொள்கிறதே
வாழ்வு முழுவதிலும்
மன புழுக்கம் எதுவுமின்றி
வாழ நினைக்கையில்
வருத்தம் வாசல் முன் வருதே
தேடி திரிகையில் அன்பே
முதலென முடிவும் தெரியுதே
காத்துக் கிடக்கிறேன் அன்பினை
சுவாசம் நுழைக்ககவே!
அதில் இன்பம் தெரியவே
ஏட்டில் கிறுக்கல் நிறையுதே
சொல்ல நினைத்ததை ஏட்டில்
கிறுக்கிப் பார்க்கிறேன்
சோர்வு எனக்கிருந்தால் அதனுடனே
கொட்டித் தீர்க்கிறேன்--
நிறைவில் வருவதையே கவிதை !
இன்பக்கவிதை!என்கிறேன்.......

10.30.2007

எதார்த்தத்தின் நிழலில்




இன்றும் நான் பேருந்தில் தான்
பயணம் செய்து கொண்டிருக்கிறேன்
நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......

உன்னுடைய விமானப் பயணம்
எப்படி இருந்த தென்று
நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள்
என்னைத் தவிர....... .

என்னுடைய விசாரிப்பை
நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய்
என்பதை நானறிவேன்
நம்முடைய வாழ்க்கை தான்
எவ்வளவு சீக்கிரத்தில்
எதார்த்தத்தின் நிழலில்
சரணடைந்து விட்டது.........

என்னுடைய டைரியில்
உனது பெயர் இடம்பெறுவது
அரிதாகிவிட்டது
உனது நினைவை எப்பொழுதாவது
ஒரு முறைத் தூண்டும்
கனவு கூட இப்பொழுதெல்லாம்
வருவதில்லை
நான் உறங்குவதே இல்லையென்பதால்....

எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா!
உன்னை மறந்ததில் எனக்கு...
பெருமிதமாக்த் தான் இருந்தேன்
உன் குரலை அலைப் பேசியில்
கேட்கும் வரை......

எப்படி இருக்கிறாய்?
என உன் குரல்
ஒலிக்கையில்.....
நலமென்று சொல்ல மட்டும்
பொய்யெனக்கு வரவில்லை

ஆனால் நீ மட்டும் சொன்னாய்.......

10.23.2007

ஒரு முத்தம் கேட்டேன்


உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்
உன்னுடைய முத்தம் அவ்வளவு
அழுத்தமான சத்த முத்தமோ!
என்றேன்..............
உன்னீரு கண்களால் என்னை
எரித்து விடுவதைப் போல
பார்த்தாய்...................
உன் கோபம் நான் சொன்ன
உண்மையிலா! இல்லை
சொல்லாது விட்ட பொய்யிலா!
என்றேன்எது உண்மை? எது பொய்?
தெரியாதவள் போல் கேட்டாய்
நீ கொடுப்பதாய் சொன்ன
உன் முத்தம் உண்மை
நீ கோபிப்பதாய் நடிக்கும்
உன் கண்கள் பொய்யென்றேன்
மௌனமானாய்!!
இந்த மௌனம் முத்தத்திற்கான
சம்மதமோ! கேட்டேன்
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ
உன் வெட்கத்தின் அழகை
காணத் தானே இத்தனை
முயற்சியும்
மகிழ்ச்சியில் நான்..............

10.22.2007

இது போதும்!


முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு
வருகிறாய் என்றதும் -- என்
வீட்டிற்குள் தான்
எத்தனை மாற்றங்கள்--உன்னால்
நிகழ்ந்தது தெரியுமா?
ஆனால் வீட்டினுள் நீ நுழைந்ததும்
உன் பார்வையில் அது
எந்த மாற்றத்தையும் செய்யவில்லை
என்பதில் ஏமாற்றம் தான் எனக்குள்
அந்த மாற்றத்தையும் நீ
கவனித்துவிட்டாய் நொடியில்..............
என்னவென்ற உன் பார்வைக்கு
என்ன சொல்வது நான்......
நீ உள்ளே வந்ததும் தான்
வீடு பிரகாசமடைந்து
குறைகள் கண்ணுக்குத் தெரிகிறத்தென்றேன்
மின்னலாய் ஒரு ஒளி
உன் சிரிப்பில் வீடு மேலும்
பிரகாசமடைந்தது................
சிரிக்காதே ! எங்கள் வீட்டில்
இப்பொழுதுதான் புதிதாக
டீவீ வாங்கியிருக்கிறோம்
உன் சிரிப்பு மின்னலைஅது தாங்காது!
என்றேன்.
உன் முகம் அந்நொடி சிவந்ததில்
நடுவெயிலில் செவ்வானத்தை
பார்த்தேன் நான்................
எனை சுட்டெறிப்பது போல்
பார்த்தாய் நீ.......................
வேண்டாம்! இது வாடகை வீடு
பற்றிக் கொள்ளப் போகிறத்தென்றேன்.............
கோபமாக 'நான் என்னத் தான் செய்ய?'
என்றாய்..........
'சமையல் செய்யேன்' என்றதும்
'ப்ளுக்' கென்று உன்னையறியாமல்
மீண்டும் சிரித்தாய்..................
அய்யோ! சிரித்துவிட்டேன்
என்று பரிதாபமாக என்னைப் பார்த்தாய்
நிறுத்தாதே! 'சீரி' என்றேன்
உங்கள் வீட்டுப் புது டீவீ?
கிண்டலாய் கேட்டாய் நீ
உன் சிரிப்புக்காக எத்தனை
டீவீ யை வேண்டுமானாலும்
இழக்கலாமென்றேன்
உனதுவிழிகள் என்னை
நேருக்கு நேர் சந்திக்க முடியாமல்
நாலாப் பக்கமும் அலைந்தன...........
என்னப் பேசுவது என்றுப் புரியாமல்
உனது உதடுகள் துடித்தன
திடீரென பேச்சை மாற்ற
'வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறது'
என்றாய்.......
உனக்காக நானும் வெளியில்
சென்றுப் பார்த்து விட்டு வந்தேன்
என்ன? என்ன சத்தம் யார் ?
என்றாய்
அண்டை வீட்டார் தான்
வீட்டிற்குள் எப்பொழுது
பூக்கள் வளர்க்க ஆரம்பித்தீர்கள்
என்று கேட்கிறார்கள்..........
ஏன்? ஏன் அப்படி கேட்கிறார்கள்
என்று ஒன்றும் அறியாதவள்
போல் அப்பாவியாய் கேட்டாய் நீ........
எல்லாம் நீ வந்ததால் தானென்று
அவர்களிடம் எப்படி என்னால்
சொல்ல முடியுமென்றேன்
உன் முகத்தில் தான்
எவ்வளவு பிரகாசம்
நொடியில் எங்கள் விட்டுப்பூக்களையெல்லாம்
தலைகுனிய வைத்துவிட்டாய்
உன் நாணத்தால் எங்கள் வீட்டிற்கு
புது சாயம் பூசி விட்டாய்
மொத்தத்தில் எங்கள் வீடு
புதியதாகியது உன் வரவால்
இது போதும்! என்று நான் சொன்னதும்
நீயும் இது போதும்! என்றாய் பதிலுக்கு................

Popular Posts