11.11.2011

ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை


இது கிண்டலுக்காக அல்ல. உண்மையில் ஏழாம் அறிவைப் பார்க்கையில் சில இடங்களில் வியந்தேன். இருப்பினும் அந்த திரைக்கதை என் மனதில் சிறு உறுத்தலை உண்டு செய்ததால் என் மனதில் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணியதை எழுதுகிறேன்.

Ø  திரைப்படம் ஆரம்பித்து முதல் 15 நிமிடங்கள் எந்த மாற்றமும் இல்லை. போதி தர்மனின் வாழ்க்கை அப்படியே திரையில் வருகிறது. அதற்கு அடுத்து போதிதர்மன் இறந்ததும் இந்தியத் தேசத்தைக் காட்டுகிறோம். தமிழகம் காட்டப்படுகிறது.

Ø  சென்னை மாநகரில் ஸ்ருதிஹாசன் ( சுபா ஸ்ரீனிவாசன்) படிக்கும் கல்லூரி காட்டப்படுகிறது. ஒரு பேராசிரியர் வந்து ஆராய்ச்சிப் பற்றி சொல்லிவிட்டு, அதை எந்த தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். 

11.09.2011

மனம் என்ன காதலின் விருந்தாளியா?



இது என்ன புது உணர்வு
எதைக் கொடுப்பது நான்...
நீ என்னிடம் எடுத்துச் சென்றது
திரும்பப் பெற முடியாத உணர்வுகள்
அல்லவா...
அப்படியிருக்க என்னிடம் நீ
எதைக் கேட்கிறாய் பெண்ணே!
கொடுத்த சில பொருட்களைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு
எல்லாவற்றையும்
நான் கொடுத்துவிட்டேன்...

11.03.2011

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு தமிழில் தான் இந்த பழமொழி தோன்றியிருக்கிறது


இது நம் தமிழகத்தில் வெகு காலமாக உலவிக் கொண்டிருக்கும் பழமொழி. பழமொழி என்பதால் நிச்சயம் இது தோன்றிய காலகட்டத்தை நாம் அறுதியிட்டு கூறிட முடியாது. இருப்பினும் நம் தமிழகம் இன்று அந்த பழமொழியை எந்தளவு பின்பற்றுகிறது என்று தெரியவில்லை.

10.28.2011

வேலாயுதம் திரைவிமர்சனம்



நீண்ட நாட்களுக்குப் பிறகு இளைய தளபதிக்கு ஒரு பெயர் சொல்லும் படம். வேலாயுதம். படம் ஆரம்பித்தவுடனேயே காஷ்மீரைப் போன்ற ஒரு இடத்தைக் காட்டி தெரியாத மொழியில் ஏதோ பேச,பழைய விஜயகாந்த் பட்த்துக்குள் நுழைந்துவிட்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது. மீண்டும் அதே தீவிரவாதமா, அய்யோ சாமி கண்ணைக் கட்டுதேன்னு கொஞ்சம் கண் அயர,சிட்டியில் ஒரு வெடிக்குண்டு வெடிக்கிறது. என்னடா இது சென்னைக்குப் பழக்கப்படாத விஷயங்களைக் காட்டுவதிலேயே இந்த தமிழ்சினிமா எவ்வளவு நாள் தான் பயணிக்குமோ தெரியலையே. பழைய சினிமாவில் வருவதுப் போல் ரிப்போர்டர் கூட்டம் அதில் ஜெனிலியா என்று ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் பொறுமையாகச் செல்கிறது.

10.25.2011

அவதாருக்கு கைத்தட்டல் கூடங்குளத்திற்கு ஏன் எதிர்ப்பு...?


அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை (தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த மனிதர்களுக்கும் இடையில் மிகப் பெரிய யுத்தம் நிகழ்கிறது. அதற்கு மனிதனில் இருந்து ஒருவன் இவர்களுக்கு நாபியாகி உதவுகிறான். இறுதியில் நாபிகள் வெற்றி பெற்று மனிதர்கள் தோற்று, அந்த கிரகத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள்.

10.19.2011

அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்



தேர்தலென்றால் சட்ட மன்றமாகட்டும்,பாராளுமன்றமாகட்டும், ஊராட்சியாகட்டும் பெரு வாரியான மக்கள் எதிர்ப்பார்ப்பது ஒரு ஓட்டுக்கு யார் எவ்வளவு தருவார் என்று தான் இருக்கிறது.
இந்த முறை இந்த வேடபாளர் இத்தனை லகரங்கள் செலவு செய்திருக்கிறார், எனவே அவர் நிச்சயம் வெற்றி பெற்றிடுவார் என்பதாகத் தான் தேர்தல் கணிப்பு இருக்கிறது. அதையும் தாண்டி அவர் எத்தனைப் பிரபலம் என்ற அளவிலும் அமைகிறது வேட்பாளரின் வெற்றி. இந்த முறையில் என்றேனும் ஒரு சிறந்த தலைவர் நமக்கு கிடைக்க வாய்பிருக்கிறதா?

10.13.2011

நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் மட்டும் போதுமா?




சமூகத்தின் சரியான பிரதிபலிப்பு “எங்கேயும் எப்பொழுதும் மணிமேகலை”. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு நன்குப் புரியும் நான் சொல்ல வருகிற கருத்து. தன்னைக் காதலிக்கும் ஒருவனுக்கு மணிமேகலையாக வரும் அஞ்சலி, என்னென்ன தேர்வுகள் வைக்கிறாள் என்பதை இந்தக் கதையில் அழகாக சொல்லியிருக்கிறார்கள். தேர்வுகள் என்பதைவிட தன்னைக் காதலிப்பதனால் என்னென்ன பிரச்சினையை காதலனான கதிரேசன்(ஜெய்) சந்திக்க வேண்டும் என்பதை இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

Popular Posts