10.13.2011

நானோ தொழில்நுட்பத்தினால் உடல் தானம் அவசியமற்றுப் போகும்:




     இன்று நாம் என்ன தான் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்தாலும், மனித சமுதாயத்தையே மிரட்டிக் கொண்டிருக்கும் சில கொடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழியை இன்னும் நாம் கண்டறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் “ ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற சிறந்த மனிதரை நாம் கணையப் புற்று நோய்க்கு பலிக் கொடுத்திருக்க மாட்டோம்.
     மனிதனை தாக்கும் ஒவ்வொரு நோயும் மனித நாகரிகத்தின் மிக மோசமான பிரதிபலிப்பேயாகும். பல ஆண்டுகளாக மனித இனம் இந்தப் புற்று நோயை எதிர்த்துப் போராடிக் கொண்டுத் தான் இருக்கிறது .இருப்பினும் நிரந்தர தீர்வு எதுவும் இன்று வரை கிடைத்தப்பாடில்லை. அப்படியிருக்க நானோ தொழில்நுட்பத்தால் உருவாகி வரும் நானோ ரோபோ என்ற ”நானோபட்ஸ்” புற்று நோயை மட்டுமின்றி,இன்னும் பல நோய்க்கும் நிரந்தர தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
     மிக நுண்ணிய தொழில்நுட்பமான நானோ ரோபோ, நம்முடைய ரத்த அணுக்கள் வரை சென்று நோய்க்கான காரணிகளை அழித்து, அணுக்களை மீண்டும் பழையபடி செயல்படச் செய்கிறது என்கிறார்கள். இது வரை புற்று நோய்க்கான மருத்துவமாக பின்பற்றி வரும் கிமோ தெரபி, புற்று நோய்க்கான செல்களை மட்டுமின்றி ஆரோக்யமான செல்களையும் அழித்து விடுவது எல்லோரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் இந்த முறையில் நோய்க்கான ஒரு செல் அழிக்கப்படவில்லையென்றாலும் மீண்டும்அந்நோய் ஏற்பட வாய்பிருக்கிறது.
ஆனால் நானோ ரோபோ மூலம் இந்த குறையை சரி செய்துவிட முடியும். இது புற்று நோய்க்கான அணுக்களை மட்டுமின்றி மற்ற அணுக்களின் ஆரோக்யமற்ற செயல்களையும் சரி செய்கிறது. அது மட்டுமின்றி வருங்காலத்தில் இந்த தொழில் நுட்பத்தால் ஊசி மூலம் நானோ ரோபோக்களை மனித உடம்பிற்குள் செலுத்தி புற்று நோயை உடனே நிரந்தரமாக சரி செய்து விட முடியும். சிறு நீரகம்,கல்லீரல் செயலிழப்பு என்று எல்லாவற்றிற்கும் இதன் மூலம் வருங்காலத்தில் தீர்வு காணலாம்.
சிறுநீரகம் செயலிழந்தால அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நானோ ரோபோ மூலம் அதனை சீர் செய்துவிட முடியும். எனவே வருங்காலத்தில் உடல் தானமே தேவையற்றதாகிவிடும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மனித சமூதாயத்திற்கே சவாலாக இருக்கும் எய்ட்ஸ் நோயையும் வருங்காலத்தில் குணபடுத்திவிட முடியும் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts