• 11.12.2011

  பிளாக்கரில் நான் செய்த தவறுகள் உதவுங்கள்
  ஒரு பதிவை எழுதிவிட்டு அதை பதிந்த பின் மறுமுறை அதை மீண்டும் திருத்துவது இயலாமல் இருக்கிறது. நேற்று சில மாற்றங்களை செய்து அதை சேமித்தேன். நீண்ட நேரமாகியும் பதிவு சேமிக்கப் படாமலேயே இருக்கிறது.
  என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.
  நான் பதிவை வெளியிட்டப் பின் அதை திருத்தி சேமிக்க என்ன வழி?
  நேற்றில் இருந்து முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். நீண்ட நேர முயற்சிக்குப் பின் பதிவு புதிதாக வெளிவந்ததாக தகவல் வருகிறது.
  என் வலைப்பூவிற்கு சென்றுப் பார்த்தால் பழைய பதிவுகள் புதிதாக வெளியாகிவுள்ளது. bX-d2c2la  என்ற பிழை செய்தி வருகிறது.
  இதற்கு பிளாக்கரின் ஃபாரமிலும் உதவியை நாடினேன். இன்னும் பதிலில்லை
  எனவே தான் இதை ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.
  தயவு செய்து இதற்கு தீர்வு தெரிந்தவர்கள் உதவவும்.

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே