எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும்
மெல்லிய நூலிழையால் பிணைக்கப்பட்டிருக்கிறது
அன்பை வெளிக்காட்டுவதில்
உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான்
இருப்பினும் அன்பில் வறுமை
இல்லை என்னிடம்
மூடிய பின்னும் எனது விழிகளில்
பார்வை மறைவதிலலை
உன் முகம் மட்டுமே
எனது மௌனங்களில் வெளிப்படும்
அன்பை உன்னால் உணர முடியவில்லை
எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன்
என் வார்த்தைகளை விட
என் மௌனத்தை அல்லவா
நீ எளிதில் புரிந்துக் கொள்வதாக
எண்ணியிருந்தேன் இது வரை…………….
போகட்டும் எப்பொழுதுமே
உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்
தானே உறவாடிக் கொண்டிருந்தது
இப்பொழுது மட்டும் என்னிடம்
வார்த்தையை எதிர்பார்ப்பதில்
என்ன நியாயம் சொல்!
பேசிக் கொண்டிருப்பவன் நீ
கேட்டுக் கொண்டிருப்பவள் நான்
எனவே நீயே பேசிவிடு !
நம் நேசத்தைப் பற்றி அதில்
நம்முடனே தவழ்ந்து வந்த நாட்களைப் பற்றி
பேசாமல் மட்டும் இருந்து விடாதே!
அன்பை வெளிக்காட்டுவதில்
உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான்
இருப்பினும் அன்பில் வறுமை
இல்லை என்னிடம்
மூடிய பின்னும் எனது விழிகளில்
பார்வை மறைவதிலலை
உன் முகம் மட்டுமே
எனது மௌனங்களில் வெளிப்படும்
அன்பை உன்னால் உணர முடியவில்லை
எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன்
என் வார்த்தைகளை விட
என் மௌனத்தை அல்லவா
நீ எளிதில் புரிந்துக் கொள்வதாக
எண்ணியிருந்தேன் இது வரை…………….
போகட்டும் எப்பொழுதுமே
உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்
தானே உறவாடிக் கொண்டிருந்தது
இப்பொழுது மட்டும் என்னிடம்
வார்த்தையை எதிர்பார்ப்பதில்
என்ன நியாயம் சொல்!
பேசிக் கொண்டிருப்பவன் நீ
கேட்டுக் கொண்டிருப்பவள் நான்
எனவே நீயே பேசிவிடு !
நம் நேசத்தைப் பற்றி அதில்
நம்முடனே தவழ்ந்து வந்த நாட்களைப் பற்றி
பேசாமல் மட்டும் இருந்து விடாதே!
உனது நேசங்க்களின் தொகுப்புக்கு
தோல்வி என்ற தலைப்பை
மட்டும் வைத்துவிடாதே! தயவு
செய்து பேசிவிடு!
தோல்வி என்ற தலைப்பை
மட்டும் வைத்துவிடாதே! தயவு
செய்து பேசிவிடு!
என் சுவாசத்தினுள்
உனது நேசக்காற்றினை
வரவேற்க காத்திருக்கிறேன்……
உனது வார்த்தைகளில்
சில என்னை கோபப்படுத்தியதுண்டு
அப்பொழுதெல்லாம்
எனது கோபத்தை ரசிப்பதற்க்காகவே
பேசினேன் என்பாயே…..
இப்பொழுது
என் காதலை ரசிக்க கொஞ்சம் பேசேன்!
நான் நிச்சயம் கோபம் கொள்ள மாட்டேன்
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
வார்த்தைகளே இல்ல இந்த கவிதைய வர்ணிக்க :) என்னால நிச்சயமா சொல்ல முடியும் இது உங்க அனுபவத்தின் வெளிப்பாடு தான் :)
ReplyDeleteஅழகு..
ReplyDeleteமுழுமையாய் இரண்டு முறை வாசித்தேன்..
பகிர்விற்கு நன்றி...
என்னால நிச்சயமா சொல்ல முடியும் இது உங்க அனுபவத்தின் வெளிப்பாடு தான் :)
ReplyDeletejenosh jeyam என்ன சொல்வது, ஒரு பெண்ணாக இருந்தால் காதல் எப்படி இருக்கும் என்று யோசித்து எழுதியது.இதை எழுதுகையில் எனக்கு நிறைய அனுபவம். இது முழுக்க கற்பனையினால் எனக்கு கிடைத்த அனுபவம்
மயிலன் உன் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி...
ReplyDelete