• 11.23.2011

  பிளாக்கரில் நிறைய சந்தேகங்கள் எனக்கு எழுந்துள்ளது


   
  ஒரு மாதமாக என் பிளாக்கருக்கு ஒரு நல்ல டெம்ப்ளெட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமின்றி நிறைய சந்தேகங்கள் பிளாக்கரில் எனக்கு எழுந்துள்ளது
       யாரேனும் எனக்கு உதவுங்கள்...

  என் சந்தேகங்கள்
  •      என்னுடைய கூகுல் கனெக்ட்டில் நண்பர்கள் இணைக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதிவு மின்மடலாக செல்லுமா?
  •      ஏனெனில் நான் இணைந்துள்ள எந்த தளத்திலிருந்தும் எனக்கு எந்த பதிவும் வரவில்லை.
  •      ஒரு தளத்தில் இணைந்த பிறகு அந்த தளத்தில் பதிக்கப்பட்ட புதிய பதிவை என்னுடைய பிளாக்கரின் டாஷ்போர்டில் பார்க்கலாம். ஆனால் நான் இணைந்துள்ள தளத்தில் இருந்து எனக்கு அந்த வசதி வரவில்லை. திரும்ப அந்த பதிவைப் படிக்க நான் அந்த வலைத்தளத்தைத்தேட வேண்டியிருக்கிறது   இதனால் வலை நண்பர்களை இழக்க நேரிடுகிறது.
  •      என்னுடைய வலைத்தளத்தை பார்வையிடும் நண்பர்கள் கீபோட்டை(keyboard) உபயோகித்து பக்கத்தை நகர்த்த முடியவில்லை என்று சொல்கிறார்கள். பக்கத்தின் மேலே செல்ல வேண்டுமென்றால் மெளஸைத்(mouse) தான் நம்ப வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இதை சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?
  •                 எனக்குப் பிடித்த ஒரு டெம்ப்ளெட்டை நான் மாற்றுகையில் எல்லா விட்ஜெட்டும் மறைந்துவிடுகிறது. குறிப்பாக வலைத்திரட்டிகளின் வோட்டு பட்டை மறைந்துவிடுகிறது. எனவே டெம்ப்ளெட்டை மாற்ற அச்சமாக இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

  இதைப் பற்றி அறிந்தவர்கள் உதவவும்

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே