11.22.2011

புது வீடு குடி புகும் பொழுது


 (என்னுடைய  கவிதைக்கான வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கவிதை)
புது வீடு குடி புகும் பொழுது
எடுத்துப் போக வேண்டிய பொருட்களை
ஒவ்வொன்றாய் சொன்னாய் நீ
குத்து விளக்கு !
நான் வேண்டாம்
நீ இருக்க அது எதற்கு?
என்றேன்.
உன் முகம் லேசாக
சிவந்து கொண்டிருந்தது.
குங்குமம் போல்
உன் முகம் இருக்க
குங்குமம் கூட வேண்டாம்.
கொஞ்சமாய் முகம் மலர்ந்தாய்
வீட்டிற்கு மீன் விளக்குகள்
கூட வேண்டாம்
இப்படி நீ கொஞ்சம்
சிரித்தாலே போதும்
வீடு வெளிச்சமாகும்
என்று நீ சிரிக்கும் பொழுது
சொன்னேன்
உன் முகம் லேசாக
கோபம் காட்டியது
முக்கியமாக ஒன்று
அடுப்பு கூட வேண்டாம்
நீ இப்படி கோபமாக பார்த்தாலே
போதும் எல்லா பொருட்களும்
வெந்து உணவாக மாறிவிடும்
என்றேன்
பேசாமல் இருந்த நீ பேசினாய்
ஏன்? அப்படியே வீடு கூட வேண்டாம்
உன் உள்ளம் இருக்க
அது எதற்கு என்று சொல்வது
தானே பொய் மனிதா! என்றாய்
இல்லை உள்ளத்தை வீடுன்னு
சொல்லாதே அது என் கருவறை
அங்கு என்னைத் தவிர வேறு
யாரும் வர முடியாது.
என்றதும் உன் கண்களில் ஈரம் நிறைந்தது
இதை மட்டும் தயவு செய்து
புது வீட்டிற்கு கொண்டு
செல்லக் கூடாது என்றதும்.
ஆமோதிக்கும் வித்தில் தலையை அசைத்தாய்
என் உயிரே அசைந்தது அந்நொடி…
 

 
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

4 comments:

  1. உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சரளா அவர்களே

    ReplyDelete
  2. பிறகு என்ன தான் எடுத்துட்டு போனீங்க இல்ல போகாமலே இருந்துட்டிங்களா ?

    வர்ணனை அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. என்ன சகோதரி இப்படி கேட்டுவிட்டீர்கள். புது வீட்டிற்கு அன்புடன் எல்லாமே கொண்டு தான் போனோம்.

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts