1.17.2012

இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...?

 
 
நீண்ட நாட்களாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலைப் பற்றிய ஒரு விவாதத்தை உங்களின் முன் வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  காலந்தோறும் காதலுக்கு நிறைய விளக்கங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...
இது தான் தலைப்பு
                 எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்...

வரையறுத்துச் சொல்லக் கூடியதாய் காதல் இருந்தால் என்றைக்கோ அந்த உணர்வு மறைந்து போயிருக்கும்...
வரையறைகளுக்கும்,விளக்கங்களுக்கும் அப்பாற்ப்பட்டது தான் காதல்...
எனினும் கடவுளைப் போல காதலுக்கும் ஒரு சரியான வரையறையைத் தேடி அலைவதில் தான் மனித மனம் இன்றும் முயல்கிறது.இனியும் முயன்று கொண்டே தான் இருக்கும். இந்த தேடலுக்கு முடிவே இல்லை. இந்த தேடலில் கிடைத்த அனுபத்தையே நிறைய பேர் ”காதல்என்று சொல்லிக் கொள்கிறார்கள். இருப்பினும் எல்லோருக்கும் வேறு வேறு அனுபவம் கிடைப்பதால் இன்னும் காதல் தேடுதலாகவே இருக்கிறது. முடிவுறாத பயணம் தான் காதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இந்த விளக்கமும் முடிவல்ல் ஒரு தேடலுக்கான தொடக்கமே...
இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமானால், நீங்கள் வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். 


மனித மனம் எப்பொழுதும் எல்லாவற்றிலும் வரையரைகளை வைத்துக் கொண்டே வாழப் பழகிவிட்டது. வாழ்வதற்கு வரையறைகள் மிகவும் முக்கியம்.
இருப்பினும்வரையறுக்க படாத எந்த ஒரு விடயமும் எல்லை மீறலில் தான் முடியும் என்று பெரும்பாலான தரப்புகள் சொல்கின்றது.எல்லைகள் என்பது ஒவ்வொருவரின் மனதின் அறிதலைப் பொறுத்தே அமைகிறது. மனதின் பாதைகளை விசாலப்படுத்தும் பொழுது எல்லைகள் விரிவடைகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் எல்லைகளே இல்லாமல் போகின்றன.
 
   உருவத்தின்
வழியே கடவுளை பார்த்து பார்த்து, மனதை பக்குவப்படுத்தி கடவுள் இது இல்லை, இதுவும் இல்லை என்று மேலும் மேலும் உள்ளுக்குள் பயணம் செய்து எல்லைகள் இல்லா பெருவெளியில் மனம் ஒடுங்குவது போல் தான் காதலும்...


காதலுக்கும் எல்லை இல்லை. காதலில் இன்னும் நாம் கண்டுபிடிக்க்ப் படாத அற்புதமான உணர்வுகள் உணரப்படாமலேயே இருக்கிறது.

அதை இன்றோ நாளையோ ...
ஏன் பல நூற்றாண்டுக்கு பிறகோ ஏதேனும் காதலர்களின் இதயத்தில் விழித்தெழலாம். எடிசனுக்கு முன்னும் பூமியில் டங்க்ஸ்டன் இருந்திருக்கிறது, இருப்பினும் எடிசனுக்கு பிறகே அதன் மூலம் நாம் வெளிச்சத்தை உணர்ந்தது போல் தான், ஒவ்வொரு காதலர்களும் தங்கள் காதலின் எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டும், சுருக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். 
புறத்திலும் சரி... அகத்திலும் சரி... நாகரிகத்தை கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட எல்லைகள் அறிவின் எல்லைகளே... அது அன்பிற்கு என்றுமே எல்லைகள் வகுக்க முடியாது. 


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts