• 1.20.2012

  பிரிவு என்பது துயரமல்ல…. ! ஆன்ந்தம்….!  உங்களின் நட்பு
  உனக்காய் மாறும் தருணங்களில்
  பகிர்தலில் நிகழ்ந்த பழக்கத்தின்
  நிழல்களில்…
  இளைப்பாரிக் கொள்ள
  இருவருமே நினைப்போம்
  மாறப் போகும் காலத்தின்
  பிரம்மாண்டமான வெளியில்
  அன்பின் சிறு ஓளியில்
  இருளை பற்றிய அச்சமின்றி
  நட்பின் கைகளைப் பற்றி
  நெடுந்தூரப் பயணம் செய்வோம்
  எதேனும் ஒரு இடத்தில்
  உன்னாலோ அல்லது என்னாலோ
  பயணத்தை தொடர இயலாமல்
  போகலாம்.
  உள்ளத்தில் துப்பறியும் நோக்கமின்றி
  நட்பறியும் எண்ணத்தில் பழகிய உறவில்
  நீயின்றியோ,அல்லது நானின்றியோ
  நட்பின் பயணம் தொடர்ந்து கொண்டு
  தான் இருக்கப் போகிறது.
  வாழ்வின் எந்த தருணத்திலும்
  நம்மை அழைத்துக் கொள்ள
  ஆயத்தமாகவே இருக்கிறது
  நட்பின் பயணம்.
  நம் விரல்களின் பற்றுதலிலோ
  நம் விழிகளின் பார்வையிலோ
  நம் முகத்தின் புன்னைகையிலோ
  என்றேனும் நம் நட்பின் பயணம்
  தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும்
  தருணம் உணரலாம் நாம்!
  நட்பில் பிரிவு என்பது துயரமல்ல…. !
  ஆன்ந்தம்….!
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே