7.21.2012

நட்பின் துளிகள்


சுற்றிக் கொண்டே பூமி நகர்வது போல்
நட்புக் கொண்டே நகர்கிறது நம் நாட்கள்
அறிமுகத்தின் ஈர்ப்பு அடங்காமல்
பகிர்தலில் உனக்கான வெளிகளை
நீ எனக்கு காண்பிக்க
எனக்கான வெளிகளை நான்
உனக்கு காண்பிக்க

அற்புதமான அந்த நட்பின்
பிறந்த நாட்களை நிறையவே
கொண்டாடியது மனம்.
உனக்கும் எனக்குமான நட்பில்
பாலினப் பாகுபாடின்றி
நினைத்தலில் வெற்றிடத்தை
உணர்கையில் தான்
நீ எனக்குள் நிரப்பிய
நட்பின் துளிகளைப் பார்க்கிறேன்.
சமுத்திரமாய் மாறப் போகும்
அந்த துளிகளை ஒவ்வொரு நொடியும்
இருவருமே மாறி மாறித்
தூவிக் கொண்டே இருக்கிறோம்
வாழ்வில் ஏதேனும் ஒரு துளி
நம் நட்பை சமுத்திரமாக்கக் கூடும்
என்ற எதிர்பார்பின்றியே நிகழ்வில்
கைக்கோர்த்தபடி நடக்கிறோம்
என்றேனும் ஒரு நாள்
அந்தத் துளி உன் விழியிலோ
அல்லது என் விழியிலோ
துளிர்க்குமென்றால்
அன்றும் கொண்டாடுவோம்
நம் நட்பின் பிறந்த நாட்களை
கண்ணீர்த் துளிகளோடு...


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

11 comments:

  1. அந்தத் துளி உன் விழியிலோ
    அல்லது என் விழியிலோ
    துளிர்க்குமென்றால்
    அன்றும் கொண்டாடுவோம்
    நம் நட்பின் பிறந்த நாட்களை
    கண்ணீர்த் துளிகளோடு...//

    நம்பிக்கைதானே வெற்றிக்காண துவக்கப்புள்ளி
    மனம் கவர்ந்த வரிகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. Replies
    1. உங்கள் வாக்கிற்கு நன்றி

      Delete
  3. பாலினம் தாண்டிய நட்பினை அழகாக எடுத்துரைக்கும் கவிதை..ரசித்தேன்.வாக்கிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் பின்னூட்டங்கள் உண்மையில் எனக்கு புத்துணர்வு தருகிறது நண்பரே...

      Delete
  4. சென்னையில் ஆகஸ்டு 19 ம் நாள் பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி வருகிறது.தங்களை கலந்து கொள்ள அழைக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. 2007 ஆம் ஆண்டில் இருந்து நான் வலைத்தளத்தில் எழுதி வந்தாலும் இந்த ஆண்டே அதைப் பற்றி தெளிவாக அறிந்தேன். மேலும் அறிய நிச்சயம் ஆகஸ்டு மாதம் அந்த சந்திப்பில் கலந்து கொள்வேன்.

      உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  5. அழகான வரிகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. இனிய பதிவு வாழ்க வளமுடன்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts