• 7.19.2012

  உன்னுடைய இருத்தலின்றி

   

  என்னுடைய பகற் பொழது உன்
  இரவை விட மிகவும் இருள்
  மயமானது.
  எந்த சலனமுமின்றி நிசப்தமாய்
  நகர்கிறது.

  என்னுள் எந்த எண்ணமும்
  தோன்றிவிடாமல் எனகுள்ளேயே
  ஒரு புழுக்கம் எப்பொழுதுமே
  என்னை அணைத்தபடி இருக்கிறது.
  பொழுதுகளின் வேறுபாடறிய முடியாமல்
  இரவுகளின் சலனமற்ற சாலைகளில்
  ஒளியைத் தேடி அலைகிறேன்
  கண்கள் இருப்பதையே மறந்து விடும்
  நொடிகளில் தான் உணர முடிகிறது
  உன்னுடைய இருத்தலின்றி என்னுள்
  எதுவுமே நிகழாதென்று  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே