• 7.20.2012

  என்னை என்ன செய்யப் போகிறாய்....?


  உன் கோலம் காணவோ...
  நீ போடும் கோலம் அதிகாலை
  என்னை எழுப்புகிறது....

  உன் மெளனம் வைத்த
  புள்ளிகளிலே உன் நாணம்
  போடும் கோலத்தையே
  என்னைத் தவிர யார்
  கண்டிட முடியும் பெண்ணே...!
  உன் விழி மட்டும் அசைய
  இதழ் கொஞ்சம் விரிய
  நீ உதிர்க்கும் சிரிப்பு தான்
  எனக்கு நியாபகப்படுத்தும் சூரியன்
  வந்துவிட்டதென்று
  என் எதிரே கொட்டிக் கிடக்கும்
  மாவுக் கூட உன் கையழகில்
  எழில் வண்ணம் பெருகிறது.
  என் மனமோ பூத்துக் குலுங்கும்
  நந்தவனம் உன் கையால்
  என்னை என்ன செய்யப் போகிறாய்....?  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே