இது மதிப்புக்குரிய காந்தியின் வாழ்வில்
நடந்தது மட்டுமல்ல. பிரபலமடையாத நிறைய மனிதர்களின் வாழ்விலும் நிகழ்ந்த வண்ணம் தானிருக்கிறது.
அப்படி என்ன நிகழ்ந்தது என்று கேட்கிறீர்களா...?
இன்றைய தலைமுறை தெரிந்துக்
கொண்டு பின்பற்ற வேண்டிய ஒரு அன்பான நிகழ்வு.
மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்தூரி பா அவர்களுக்கு
ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் போனது.அப்பொழுது மருத்துவர், அவர்களை உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று
அறிவுறுத்தியிருக்கிறார். அதைப் பற்றிக் கவலைப்படாமல் கஸ்தூரிப்பா அவர்கள் உணவில்
உப்பை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைக் கண்ட காந்தி கோபமாகக் கண்டித்திருக்கிறார்.
அதற்கு கஸ்தூரிப்பாவும் ” “உணவில் உப்பில்லாமல் எப்படி உட்கொள்வது...? ”என்று
கேட்டிருக்கிறார். இதைக் கேட்ட காந்தி ”” “ அவருக்காக ஒரு வருடம் உணவில் உப்பை சேர்த்துக் கொள்ளாமல்
உண்டு வந்திருக்கிறார்.
கஸ்தூரி பா அவர்கள் எவ்வளவு வேண்டிக்
கொண்டும் அவர் உப்பைத் தொடக் கூட இல்லை. உனக்காக நான் இந்த ஒரு வருடம் உப்பைத் தொடப்
போவதில்லை என்று ஒரு வருடம் அப்படியே உப்பில்லாமல் உண்டு வந்திருக்கிறார். அவர்
உப்பில்லாமல் உண்டதினால் கஸ்தூரிபாவும் அப்படியே உண்டு வந்திருக்கிறார். உடல் விரைவில்
நலமடைந்திருக்கிறது. காந்தி அவர்கள் தன் அன்பை எப்படி நீருபித்திருக்கிறார் என்று
நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது.
இங்கே தான் ஒரு நல்ல கணவனுக்கு
உதாரணமாக திகழ்கிறார் காந்தி. துணைவியார் உப்பைத் தொடக் கூடாதென்பதில் அவர் மேல்
கண்டிப்பைக் காட்டியிருக்கிறார்.மேலும் அதை அவர் கடைப்பிடிக்க, அவருடன் சேர்ந்து தானும் கடைப்பிடித்திருக்கிறார். இங்கு
தான் காந்தியின் காதல் நன்கு புரிகிறது.
இந்த செயல் காந்தியின் வாழ்வில் மட்டிமின்றி
சென்ற தலைமுறையில் நிறைய குடும்பங்களில் இருந்தது. ஆனால் இது பெரும்பாலும் பெண்களின்
மத்தியில் தான் இருந்தது. கணவனுக்கு ஏதேனும் உடல் நலக் குறைப்பாடென்றால் மனைவியும்
அந்த பத்திய முறையிலேயே உண்பார்கள். இருப்பினும் அது அன்பின் அடிப்படையில் நிகழ்ந்ததா
என்றால் கேள்விக்குறி தான்.
இன்று குடும்பங்களில் நிகழும் விவாகரத்துக்கெல்லாம்
சரியான தீர்வை காந்தி அன்றே சொல்லிச் சென்றுவிட்டார்.
நம்முடன் இறுதி வரை துணைக்கு வரப் போகும் வாழ்க்கைத் துணைக்காக சில விஷயஙகளை
விட்டுக் கொடுப்பதில் நாமொன்றும் குறைந்துவிடப் போவதில்லையே ... ஏனெனில் இந்தச் செயலை செய்தவர் உலகத்தின்
தலை சிறந்த தலைவர்களில் ஒருவர்.
அன்பின்
அடிப்படையில் நிகழும் இதுப் போன்ற செயல் ஒருவருடைய உடல் நோயைக் குணப்படுத்தக்
கூடிய வல்லமைப் பெற்றது என்றால் நாமும் அதைக் கடைப்பிடிக்கலாமே....
அதை விடுத்து ஒருவருக்கு வேண்டாத
செயல்களை அவர்கள் முன்னிலையிலேயே செய்வதன் மூலம் ஆரோக்கியமானவர்களைக் கூட நோயாளியாக்கும்
வாழ்க்கை முறையைத் தான் இன்றைய சமூகம பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
எனவே இன்றைய இளைஞர்கள் காதலுக்கு
கண்டவர்களை உதாரணமாகக் கொள்வதை விட காந்தியை நல்ல உதாரணமாகக் கொண்டு வாழலாம். பல
குடும்ப வன்முறைகளை தவிர்த்து அன்புடன் ஆரோக்கியமான வாழ்வை மேற்க் கொள்ளலாம்
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
அதை விடுத்து ஒருவருக்கு வேண்டாத செயல்களை அவர்கள் முன்னிலையிலேயே செய்வதன் மூலம் ஆரோக்கியமானவர்களைக் கூட நோயாளியாக்கும் வாழ்க்கை முறையைத் தான் இன்றைய சமூகம பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
ReplyDeleteஉண்மையை சமுதாயத்தின் தலையில் குட்டி எடுத்துரைக்கும் வரிகள், நன்று தொடரட்டும் தங்களின் எழுத்து பணி
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. நிச்சயம் தொடரும்
Delete/// ஒருவருக்கு வேண்டாத செயல்களை அவர்கள் முன்னிலையிலேயே செய்வதன் மூலம் ஆரோக்கியமானவர்களைக் கூட நோயாளியாக்கும் வாழ்க்கை முறையைத் தான் இன்றைய சமூகம பின்பற்றிக் கொண்டிருக்கிறது.///
ReplyDeleteஉண்மை...
சிறப்பான பகிர்வு...
..
தொடர வாழ்த்துக்கள்... நன்றி.. (TM 3)
நண்பரே உங்களைப் போன்றவர்கள் ஆதரவு இருக்கும் வரை என் எழுத்துப் பணி என்றும் சோர்வதில்லை
Delete