8.03.2012

முகநூலில் பரவி வரும் புது கலாச்சாரம்

     முகநூலில் நிறைய புகைப்படங்களை தரவேற்றம் செய்து (like) விருப்பங்களைப் பெரும் போக்கு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே...
     தங்களின் புகைப்படங்களை ஆண், பெண் பாகுபாடின்றி முகநூலில் தரவேற்றி மற்றவரின் பார்வைக்கு பதிவிடுவதும். அதைப் பார்க்கும் பலர் வக்கிரமாக பின்னூட்டம் அளிப்பதும் முகநூலில் ஒரு வழக்கமாகவே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
     இதுயெல்லாவற்றையும் விட தற்பொழுது ஒரு பதிவைப் பார்த்து அதிர்ந்தேன்
     ஒரு இளைஞன் அவனருகில் ஒரு இளைஞி, அவனின் கைகள் அவள் தோளை அணைத்தப்படி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "என் வருங்கால மனைவி" என்று வேறு அதற்கு தலைப்பிட்டபடி ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதற்கு கீழே இப்பொழுது காதலி இன்னும் 2 வருடங்களில் என் மனைவி என்று வேறு குறுந்தகவல்
     இதற்கு ஏகப்பட்ட விருப்பங்கள் குவிந்தபடி இருக்கின்றது. மேலும் 100க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள்

     என் வருங்கால மனைவி என்று அந்த இளைஞன் மார்த் தட்டிக் கொள்வது மிகவும் துணிச்சலான செயல் தான். ஆனால் அதை முகநூலில் போட வேண்டிய அவசியம் என்ன...?  பெற்றோரின் முகத்திற்கு நேராக அல்லவா இதைச் சொல்ல வேண்டும். அதை விடுத்து காதலை இப்படி தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்துவது அறிவீனமில்லையா...?
   இருவருக்குள் மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டு விருப்பங்களையும், விருப்பமின்மைகளையும் பகிர்ந்துக் கொள்வது தானே காதல். அதை விடுத்து பலருக்கு முன் விளம்பரப்படுத்தி  அதை பலருடன் பகிர்ந்துக் கொண்டு, விருப்பங்களை பெறுவது எப்படிக் காதலாகும்.
     இதை அந்தப் பெண் ஆமோதிப்பது, நம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமமாகத் தான் இருக்கிறார்கள் எனபதை உணர்த்துவது போலுள்ளது
     எதற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின் எதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது, என்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

13 comments:

  1. இருவருக்குள் மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டு விருப்பங்களையும், விருப்பமின்மைகளையும் பகிர்ந்துக் கொள்வது தானே காதல். அதை விடுத்து பலருக்கு முன் விளம்பரப்படுத்தி அதை பலருடன் பகிர்ந்துக் கொண்டு, விருப்பங்களை பெறுவது எப்படிக் காதலாகும்.

    காதலை குறித்து தங்களின் வரிகள் உண்மை, அதே சமயம் இன்றைய இளைஞர்களின் மனபோக்கு அருவருக்கத்தக்கதாகவே உள்னது.

    ReplyDelete
  2. இன்றைய இளைஞர்கள் வேறு யாருமில்லை. நேற்றைய இளைஞர்களின் கற்பனை தான் இன்றைய இளைஞர்கள். அவர்கள் கனவு கண்டது பாதி, நேரில் காண்பது மீதி.

    ReplyDelete
  3. நல்ல அலசல்...

    உண்மையான காதல் அல்ல... விளம்பரம்... இதைத்தான் நாகரீகம் என்று சொல்கிறது இந்த சமூகம்... பல கொடூரங்களின் மொத்த உருவம் முகநூல்...


    (த.ம. 3)

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது நண்பரே... மனிதனுக்குள் உறங்கும் தேவையில்லாத குணங்களையெல்லாம் தட்டி எழுப்புகிறது இந்த நவீனத் தொழில்நுட்பம். ஒரு வேளை புது கலாச்சாரத்திற்கான அஸ்திவாரத்தை பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஆலோசிக்க வேண்டிய காலக் கட்டம் தான் இதுவோ...? எந்த இணையம் இவர்களை இப்படி மாற்றுகிறதோ அதே இணையம் தான் நம்மைப் போன்ற பதிவர்களையும் இணைத்திருக்கிறது. சின்னக் கோட்டை அழிக்க நினைப்பதை விட பெரிய கோடொன்றை அதன் அருகில் போட நாமெல்லாம் சேர்ந்து முயற்சிப்போம்

      Delete
  4. எப்படி இதை செய்கிறார்கள் நாளை நிஜமில்லாத போது ஏதேனும் ஒரு வகையில் திருமணம் நிகழாது போனால் என்ன ஆகும் யோசிப்பதில்லையே இவர்கள் ஏன்?

    ReplyDelete
    Replies
    1. அதைப் பற்றிய கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லை. பிரிந்தால் அதையும் முகநூலில் பகிர்ந்துக் கொண்டு விருப்பங்களைக் குவிப்பார்கள். இதுவும் முகநூலில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது

      Delete
  5. அந்த பெண்ணின் வாழ்க்கையையே இது கேள்விக்குறியாக்கிவிடும்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை தான். இருப்பினும் யாரும் புரிந்துக் கொள்வது இல்லையே...

      Delete
  6. They should not share more personal details with unknown, it may turn to some hazards. Sharing Photos, Mobile no's, info to unknown is always creates danger. Girls should be more alert.

    ReplyDelete
    Replies
    1. இந்த விவரங்கள் தெரியாமலில்லை. இருந்தும் செய்கிறார்கள்

      Delete
  7. Replies
    1. தப்புத் தான் என்று தெரிந்தும் செய்வதற்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்

      Delete
  8. நாகரிகம் என்கிற பெயரில் நாகரிகத்தை சீரழித்து வருவது வேதனையான விசயம்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts