• 9.13.2012

  கும்கியில் மனதை வருடிய பாடல்


  இது வரை இப்படி ஒரு பதிவை நான் எழுதியதில்லை. என்னவோ தெரியவில்லை. இந்தப் பாடலைக் கேட்டப் பின்பு எழுதாமல் இருக்க முடியவில்லை. காரணம் நேற்றிலிருந்து என் மனதை மிகவும் ஆக்ரமித்திருப்பது இந்தப் பாடல் தான்.  இயக்குனர் பிரபு சாலமனின் புதிய படைப்பான கும்கித் திரைப்படத்தில் வரும் பாடல்

  சொய் சொய் சொய் சொய்

  கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான்

  அளசு ஏதும் இல்லை அது தான் காதல் மச்சான்.

  முந்திய படத்தில் ஜிங்க் ஜக்கா என்று ஒரு வரியை அமைத்து உருவாக்கிய பாடல் போல் இந்த பாடலிலும் சொய் சொய் என்று ஒரு சொல்லை அமைத்து பாடலை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.

  இதில் இசையும் சொற்களும் ஒரு சேர கலந்து இழையோடுகிறது. இந்தப் பாடலை ஏன் நான் இங்கு சொல்கிறேன் என்றால் இதைக் கேட்கும் பொழுதே நாம் யானை மீது சவாரி செய்வதுப் போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

  மேலும் இதில் வரும் வரிகள் ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையை ஆழமாகப் பார்ப்பதாக இருக்கிறது. மனித மனங்களின் சிக்கல்களுக்கு வெகு இயல்பாக தீர்வு சொல்கிறது.

  நாமே நாளு பேருக்கு நன்மை செஞ்சாலே

  அதுவே போதும் மச்சான்
  இந்த வரிகள் மனித வாழ்க்கையின் சிக்கல்களுக்கு எளிமையான ஒரு தீர்வை சொல்வது போல் அமைந்துள்ளது.

  மேலும் என்னை மிகவும் ஈர்த்த வரிகள்

  நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே

  போதும் மச்சான்

  காதலர்களின் மனநிலையை அச்சு அசலாக பதிவு பண்ணியிருக்கிறார் கவிஞர் யுகபாரதி அவர்கள். காதல் பிசாசைத் தந்தவர் தான் இந்த வரிகளிலும் காதலைப் பிழிந்து தந்துள்ளார்.

  நாம மாண்டு போனாலும் தூக்கித் தீ வைக்க

  உறவு வேணும் மச்சான்.

  என்று இன்றைய காலக் கட்டத்தில் உறவுகளின் மேன்மையைச் சொல்வதாகவும் இந்தப் பாடல் என்னை மிகவும் ஈர்த்தது.

  காதலில் ஆரம்பித்து சகலத்தையும் இந்தப் பாடல் எளிமையாக சொல்வது கச்சிதம். இதன் இசை வார்த்தையை விழுங்காமல் நமக்கு விருந்தளிக்கிறது. என்னை ஈர்த்தப் பாடலைப் பற்றி சொன்னால் மட்டும் போதுமா…? நீங்களும் கேட்டு மகிழுங்கள்


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே