• 9.15.2012

  என் உதிரம் கலந்த நன்றி உனக்கு...  மேகம் துடைத்து

  மழைத்துளியாய்

  கருங்கூந்தலை நனைத்து…

  துளி மணலில் கலந்து

  பாதங்களை தடவும் நீர்த்துளியே…

  கோடான கோடி நன்றிகள் உனக்கு…

  என்னவளின் குடைக்குள் செல்ல

  உதவியதற்கு…

  பூவை உரசி

  புதுப் பொலிவோடு நீரைத் தொட்டு

  குளிர் உணர்வாய் என் சுவாசத்தில்

  கலந்த பூங்காற்றே…

  கொஞ்சம் வேகமாக வீசியதற்கு நன்றி

  என்னவளின் குடையை உடைத்து

  இருவரையும் நனைய விட்டதற்கு….

  நேசம் தொட்டு

  உள்ளங்கை வடிவில் உயிரை அடக்கி

  உறக்கமில்லாமல் உதிரங்களில் உணர்வை

  தந்த என் இனிய இருதயமே

  என் உதிரம் கலந்த நன்றி உனக்கு….

  என்னவளின் கை என் மேனியில்

  பட்டபின்னும் இன்னும் நீ

  துடித்துக் கொண்டிருக்கிறாயே….  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே