வர்ணனனப் போதாதே
வர்ணிக்க இயலாதே
வார்த்தைகள் பத்தாதே
உன்னை சொல்லால் அலங்கரிக்க
செந்தமிழும் கலங்கிடுமே
புது சொல் ஒன்று தேடிடுமே
பல கவிகள் படைத்திடுமே
சொற்பதத்தால் அணி செய்ய
இன்று மேகத்தின் விடுமுறையோ
எழில் சாபத்தின் அறிகுறியோ
முழு நிலவு கண் முன்னே
வதைக்குது அழகுடனே
குளிர்த் தென்றல் பணி செய்ய
உன் வாசல்வந்திட்டால்
பூவுலகம் என்ன செய்யும்
இது அழகுக்கு சோதனை தான்
வஞ்சனை செய்வது தான்
உன் அழகின் நோக்கமென்றால்
வஞ்சிக்க ஆளில்லையா
அட வஞ்சனை என் மீதா…?
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
//வஞ்சனை செய்வது தான்
ReplyDeleteஉன் அழகின் நோக்கமென்றால்
வஞ்சிக்க ஆளில்லையா
அட வஞ்சனை என் மீதா…?// அருமை நண்பா
எது நண்பரே நான் வஞ்சிக்கப் படுவது உங்களுக்கு அருமையா...?
Deleteஅற்புதமான சொல்லாடல்...
ReplyDeleteஅழகிய கவிதை
மிக்க நன்றி நண்பரே...
Deleteஅழகிய வரிகள்...
ReplyDeleteமுடிவில் சூப்பர்...
முடிவில் சூப்பர் என்றால் நான் வஞ்சிக்கப்படுவது உங்களுக்கு சூப்பரா நண்பரே...
Deleteஎடுத்து மேற்கோளிட்டு சில வரிகளை தனிமை படுத்தி வஞ்சிக்க துணிவில்லை அத்தனையும் அருமையின் எழில் ஓவியம்.
ReplyDeleteஉங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
Delete