2.24.2013

குடும்பமலரில் (தினத்தந்தி) என்னுடைய குறும்படச் செய்தி


வாசக நண்பர்களே...

           அனைவர்க்கும் முதலில் என் மன்னிப்பைக் கூறிக் கொள்கிறேன். ஏனெனில் சில நாட்களுக்கு முன் என்னுடைய குறும்படச் செய்தியைப் பற்றி (டெக்கன் கிரானிகல்) வந்தப் பொழுது, அதில் 14-01-2013 அன்று இணையத்தில் வெளியிடுவதாக அறிவித்திருந்தோம். அதன் பிறகு சில காரணங்களால் அது தள்ளிப் போடப்பட்டது. அது மட்டுமின்றி அதன்  மூலம் வந்த ஒரு திரைப்பட வாய்ப்பினாலும் உங்களுக்கு என்னுடைய குறும்படத்தை பற்றிய செய்தியை தெரிவிக்க இயலாமலேயே போய்விட்டது.

1.30.2013

விஸ்வரூபம் : சமூக அறியாமையின் எதிர்ப்பு குரல்




         இந்தப் படத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவன் தன் சமூகத்தைச் சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான். இதில் நாடு, மதம், இனம் தாண்டிய பார்வை இந்தப் படத்தில் தெரிவது தெளிவு. இதில் தமிழகம், இந்திய முஸ்லீம்கள் பற்றிய கருத்துக்கள் எதுவும் இல்லை என்று நான் சொல்லிக் கொண்டு இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கப் போவதே இல்லை.

விஸ்வரூபம் : நான் பார்த்த கதை




       தமிழகத்தில் இது வரை எந்தப் படத்திற்கும் இந்தளவு எதிர்ப்பு கிளம்பியது இல்லை. அது போன்று இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் சொல்ல வேண்டும். உலகம் முழுதும் வெளியாகி முதல் முறை தமிழகத்தில் தடை செய்யப்பட முதல் தமிழ்ப்படம் இதுவாகத் தான் இருக்கும்.அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகாவின் சில இடங்களில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்க, தமிழகத்தில் மட்டும் வெளியாகாதது மிகப் பெரிய ஏமாற்றம் தான்.

1.25.2013

விஸ்வரூபம் படத்தின் முதல் விமர்சனம்!

இது என்னுடைய விமர்சனம் இல்லை...

முகநூலில் நான் படித்த விமர்சனம். இதை ஒரு திரைத்துறைச் சார்ந்தவனாக உங்களிடம் பகிர கடமைப்பட்டிருக்கிறேன்.

 படம் பார்த்துவிட்டேன் நான் . நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னைத் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .

12.28.2012

நம் வரிப் பணம் நமக்கல்ல நாட்டிற்காவது …?



    என்ன இது நம் வரிப் பணம் நமக்கல்ல நாட்டிற்காவது பயன்படுகிறதா...? ஆமாம், நாம் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம் அந்த வரிப் பணத்தில் தான் நம் அரசாங்கம் நடக்கிறது. இது அனைவரும் அறிந்த ஒன்றே…

12.26.2012

ரணகளம் : குறும்படம் திரையீடல்



பதிவ நண்பர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் வணக்கம். என்னுடைய முதல் குறும்படம் (ரணகளம்) திரையீடல் வரும் டிசம்பர் மாதம் 30ந்தேதி ஏ.வி.எம் ஸுடியோவில் பகல் 11.00 மணியளவில் நடைப் பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு பதிவ மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 

Popular Posts