11.25.2011

தமிழ் பாடல் என்ன கொடுமை ஐயா?(why this கொலை வெறி டீ )

 
ஆங்கிலம் தெரியாதவன் தமிழைக் கொஞ்சம் பயன்படுத்தி பாடும் பாடலாகத் தெரிகிறது. உண்மையில் இதில் வரும் வார்த்தைகள் ரசிக்க வைக்கிறது. இருப்பினும் தனுஷ் இதற்கு முன் பாடி இன்று வெளியாகவுள்ள மயக்கமென்ன பட்த்தில் வரும் ” “ஓட ஒட இன்னும் தூரம் “ என்ற பாடலை ஒப்பிடுகையில் இது எனக்கு அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.
     அமிதாப் அவர்கள் இதைப் பாராட்டிவிட்டார் என்று பல செய்திகள் வெளியாவதால் இந்த பாடலுக்கு மிகுந்த வரவேற்பு. யூ டுயூப்பில் நிறைய முறை இந்த பாடல் கேட்கப்படுகிறது.
     பாடல் ரசித்து கேட்கும்படி இருந்தாலும், இது இன்றைய தமிழ் இளைஞர்களின் குழப்பத்தை வெளிப்படுத்தும் அச்சு அசல் பிரதிபலிப்பாக இருப்பது நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்று.
     இந்தப் படத்தில் அந்த பாடல் இடம் பெறும் இடம் சரியாக இருக்கலாம். இருப்பினும் இது நம் தமிழ் சமூகத்தில் ஆங்கிலமும், தமிழும் எந்தளவு கலந்து இரண்டுமே தன்னிலை பெறாமல் ஒரு குழப்பமான சமூகத்தை உருவாக்கியுள்ளது என்பதை விளக்குவதாகவே என்னால் பார்க்க முடிகிறது.
     கல்வியில் 100 % சதவிகதம் எடுக்க வேண்டும் என்ற மாணவனின் மனநிலையில் காசு குடுத்தால் 50% இருந்தாலே போதும்  சீட்டு வாங்கிவிடலாம் என்ற எண்ணம் வரும் பொழுது சமூகத்தில் நல்ல மாணவனை காண்பது அரிது.
     கடினப்படாமல் எளிதில் வாய்ப்பு கிடைக்கும் சிலரைப் பார்த்து இன்றைய சமூகம் எதிலும் 50 % மட்டுமே போதும் என்று எண்ணுகிறது. எனவே தான் குப்பையான் திரைப்படங்கள் எல்லாம் விளம்பரங்களின் போலி சாயலில் பிரபலமாகிறது. அதன் பிரதிபலிப்பு தான் இந்தப் பாடலும்.
     தமிழ் சமூகம் இப்படியே விளம்பரங்களின் பார்வையில் தங்கள் கண்களை புதைத்துக் கொண்டிருந்தால், இன்றைய கலைத் துறையின் நவீன வள்ளுவனையோ, கம்பனையோ கூட நாளை வெளி நாட்டவர் தான் நமக்கு கண்டுபிடித்து தர வேண்டும். அப்பொழுது மூட்டாள் சமூகம் என்று வருங்கால மக்கள் நம்மை ஏளனம் செய்வதை தவிர்க்க இயலாது.  
    

வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

5 comments:

  1. மிகச் சரியான பதிவு. கொலை வெரி பாடலை தமிழ் பாடல் என்று கூறுவதை விட தங்லிஷ்
    பாடல் என்றே கூற முடியும். எல்லாமே வியாபர நோக்கம் தான்.

    ReplyDelete
  2. என்னுடைய ஆதங்கம் நண்பரே...
    விளம்பரங்களின் சோதனை கருவிகளாகவே இன்றைய மக்கள் மாறுவது கண்டு ஆதங்கம்

    ReplyDelete
  3. சில இடங்களில் ஆதங்கம் கூட ஆதரவாகப் போய்விடும்.

    ReplyDelete
  4. ஆனந்தன்Wed Jun 13, 02:08:00 PM 2012

    மிகக் கேவலமான நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டுவிட்டது... திரும்புவதோ திருந்துவதோ எப்போது..?

    ReplyDelete
  5. தமிழினம் என்று ஏன் பிரிக்கிறீர்கள், மனித இனமே தள்ளப்பட்டுவிட்டது

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts