• 8.03.2012

  முகநூலில் பரவி வரும் புது கலாச்சாரம்

       முகநூலில் நிறைய புகைப்படங்களை தரவேற்றம் செய்து (like) விருப்பங்களைப் பெரும் போக்கு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே...
       தங்களின் புகைப்படங்களை ஆண், பெண் பாகுபாடின்றி முகநூலில் தரவேற்றி மற்றவரின் பார்வைக்கு பதிவிடுவதும். அதைப் பார்க்கும் பலர் வக்கிரமாக பின்னூட்டம் அளிப்பதும் முகநூலில் ஒரு வழக்கமாகவே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
       இதுயெல்லாவற்றையும் விட தற்பொழுது ஒரு பதிவைப் பார்த்து அதிர்ந்தேன்
       ஒரு இளைஞன் அவனருகில் ஒரு இளைஞி, அவனின் கைகள் அவள் தோளை அணைத்தப்படி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "என் வருங்கால மனைவி" என்று வேறு அதற்கு தலைப்பிட்டபடி ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதற்கு கீழே இப்பொழுது காதலி இன்னும் 2 வருடங்களில் என் மனைவி என்று வேறு குறுந்தகவல்
       இதற்கு ஏகப்பட்ட விருப்பங்கள் குவிந்தபடி இருக்கின்றது. மேலும் 100க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள்

       என் வருங்கால மனைவி என்று அந்த இளைஞன் மார்த் தட்டிக் கொள்வது மிகவும் துணிச்சலான செயல் தான். ஆனால் அதை முகநூலில் போட வேண்டிய அவசியம் என்ன...?  பெற்றோரின் முகத்திற்கு நேராக அல்லவா இதைச் சொல்ல வேண்டும். அதை விடுத்து காதலை இப்படி தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்துவது அறிவீனமில்லையா...?
     இருவருக்குள் மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டு விருப்பங்களையும், விருப்பமின்மைகளையும் பகிர்ந்துக் கொள்வது தானே காதல். அதை விடுத்து பலருக்கு முன் விளம்பரப்படுத்தி  அதை பலருடன் பகிர்ந்துக் கொண்டு, விருப்பங்களை பெறுவது எப்படிக் காதலாகும்.
       இதை அந்தப் பெண் ஆமோதிப்பது, நம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமமாகத் தான் இருக்கிறார்கள் எனபதை உணர்த்துவது போலுள்ளது
       எதற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின் எதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது, என்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே