கோடிப் பூக்களின் சிரிப்புக்கல்ல
ஒரு மலரின் புன்னகைக்காக
ஒரு கவிதை...
ஆயிரம் பறவைகளின் சிறகுக்கல்ல
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகுக்காய்
ஒரு கவிதை...
பேசுகின்ற மொழிக்கல்ல
ஒரே ஒரு சொல்லுக்காய்...
ஒரு கவிதை...
உன் ஒரு இதயத்தின்
சலனம் தான்
என்னில் நுழைந்து பேரண்டத்தையே
சலனப்பட வைக்கிறது
பெண்ணே...!
விட்டில் பூச்சியாய்
உன் சிரிப்பொளியில்
ஒவ்வொரு முறையும்
விழுந்து மடிந்து
உயிர்த்தெழுவதை
நீ அறிவதற்கில்லை தான்
முளைத்தெழ முடியாத
மண்ணில் என் காதல் விதைகளை
நான் விதைத்துவிட்டதாக
எண்ணவில்லை பெண்ணே...
உன்னுள் உயிர்த்தெழும் பிரபஞ்ச
முயற்சியில் தான் நகர்த்தி
கொண்டிருக்கிறேன்
எனக்கான நொடிகளை
நம்பிக்கையுடன்...
மண்ணைத் தொட்டுக் கொண்டே
மேலெழும் சிறு முளையின்
பிரமாண்டமான வளர்ச்சி
என் காதலிலும் நிகழும்
அந்நொடி வரை உன்னுள்
துளிர்த்தெழப் போகும் என்
காதல் பட்டுப் போகாமல் இருக்க
சமுத்திரத்திற்காக அல்ல
சிறு துளி நீருக்காய் ஒரு கவிதை
அழகிய கவிதை
ReplyDeleteஅழகிய கவிதை
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
Deleteஎனக்கு பிடிச்சுதுங்க கவிதை..நீங்க சொன்ன மாதிரியே கருத்தும் சொல்லிட்டேன் வாக்கும் போட்டுட்டேன்..பாத்துக்கங்க..
ReplyDeleteபிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
உங்களின் பதிவைப் பார்த்தேன். அந்த சந்திப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
Deleteஎன்னுடைய பதிவு உங்களின் திரட்டியில் சேர்க்கப் பட்டுள்ளது
ReplyDeleteநல்ல வரிகள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
தொடர வாழ்த்துக்கள்.
(த.ம. 5)
இவ்வளவு தானா ? உங்களின் முந்தைய பதிவை பாருங்க...
(http://tamilraja-thotil.blogspot.com/2012/07/blog-post_19.html)