• 7.28.2012

  காதலென்றால் நீ மட்டும் தானடி

   
   காதலென்று எதைச் சொல்வது
  உன்னிடம் மட்டுமே சுற்றி வரும்
  என் நினைவுகளை உதாரணம் 
  சொல்லவா?
  இல்லை எல்லா பார்வைகளிலும் 
  உன்னை மட்டுமே தேடும் என் விழிகளைச் 
  சொல்லவா?

  எந்த செயலிலும் நீ நினைக்கும் விதம்
  செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தைச்
  சொல்லவா...?
  உன்னை நோக்கியே நொடிக்கொரு முறை
  நடக்கத் துடிக்கும் என் கால்களைச் 
  சொல்லவா...?
  இல்லை உன் பெயரை மட்டுமே எந்நேரமும்
  எழுதிக் கொண்டிருக்கும் என் விரல்களைச் 
  சொல்லவா...?
  என் வலிகளைச் சொல்லவா..?
  என் சுகங்களைச் சொல்லவா..?
  உண்மையில் சொல்ல முடியாத
  அந்த உணர்வினை
  எந்த ஒன்றைக் கொண்டும் என்னால்
  விளக்க முடியாது பெண்ணே...
  விளக்க முடியாத ஒரு உணர்வை
  எனக்கு உன் மேல் உணர்த்திக்
  கொண்டிருக்கும் காதலை 
  என்னவென்று சொல்வது...?
  எனக்குத் தெரிந்து
  காதலென்றால் நீ மட்டும் தானடி
  பெண்ணே...!  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே