8.16.2012

அன்பின் வெளிப்பாடு

 
நீ சொன்ன பொய்யான 
வார்த்தைகளின்
மத்தியில் தான்
எனது காதலின் இருத்தல்
நிகழ்ந்தது என்று நான்
நினைக்கவே இல்லை.
உனது பொய்கள்
உனக்கான அன்பின் 
வெளிப்பாடு....!

சிலப் பொருட்கள்
சிலப் பரிசுகள்
சில உறுதிமொழிகள்
சில ஆச்சர்யங்கள்
சில உண்மைகளும்
என அன்பின் வெளிபாடு
பலவிதங்கள்
அதில் உனக்கு தெரிந்த
அன்பின் வெளிப்பாடு
பொய்கள்
உனது பொய்களின் மூலம்
என்னால் உணர முடிகிறது
உனது அன்பை...
ஏன் உன்னால் மட்டும்
உணர முடியவில்லை
எனது உண்மைகளை
அன்பின் வெளிப்பாடாக....



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

7 comments:

  1. உனது பொய்கள்
    உனக்கான அன்பின்
    வெளிப்பாடு..//

    அருமையான சிந்தனை
    இதனைச் சரியாகப்புரிந்து கொள்ளத்ததால்
    பல உறவுகள் சிதைந்து
    சின்னாபின்னப்பட்டுப் போயிருக்கின்றன
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி

      Delete
  3. சிலப் பொருட்கள்
    சிலப் பரிசுகள்
    சில உறுதிமொழிகள்
    சில ஆச்சர்யங்கள்
    சில உண்மைகளும்
    என அன்பின் வெளிபாடு
    பலவிதங்கள்....

    மிகச்சரியான உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts