இன்று ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்
போட்டு வைத்திருக்கும் சாதனம் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான். மக்களின் பொழுதுப் போக்காகவும், கலாச்சாரமுமாகவே மாறிக் கொண்டு வரும்
இந்த தொலைக்காட்சி அலைவரிசைகளின் மெத்தனப் போக்கு வருங்கால தலைமுறையை நிச்சயம் பாதிக்கக்
கூடியதாக இருக்கும்
நேற்று(09-08-12) உடல் நிலை சரியில்லாததால் வெளியில்
எங்கும் செல்ல இயலவில்லை. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் கே.டிவியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் பொழுது, மதியம்
1.00 மணிக்கு “கலாட்டா கல்யாணம்” “ திரைப்படம் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். நல்ல நகைச்சுவை
திரைப்படம். பார்க்கலாம் என்று அமர்ந்தால் “ நம் நாடு “ திரைப்படம் வருகிறது. அதுவும்
1.00 மணிக்கு முன்னரே சரியாக 12.45க்கே படம் ஆரம்பமாகிவிடுகிறது. இது என்ன ஒரு மெத்தனமான
போக்கு. 1.00 மணி என்று போட்டுவிட்டு முன்னரே வேறு ஒரு படத்தை ஒளிப்பரப்பி இடையில்
அதிக விளம்பரங்களை காட்டி பணம் ஈட்டும் கலையோ என்னவோ தெரியவில்லை.
இந்த திரைப்படங்கள் யாருக்காக ஒளிப்பரப்பப்
படுகிறது. திரைப்படத்தை மாற்றியதை நேயர்களுக்கு அறிவிப்பது தானே நியாயமான செயல். அதை
விட்டு விட்டு இன்று(10-08-12) வெள்ளிக்கிழமை “கலாட்டா கல்யாணம்””“ திரைப்படத்தை
ஒளிப்பரப்பியிருக்கிறார்கள். இதை என் தந்தை கிண்டலாக அலைப்பேசியில் சொன்னார். என்ன
சொல்வது ...?
பார்க்கும் நேயர்கள் நாமெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்திருக்கிறார்களோ...?
ஒரு தனியார் தொலைக்காட்சியின் நேரமின்மை, மற்றும் நேர்மையின்மை இப்படியிருந்தால் சமூகம் எப்படி இருக்கும்
என்ற கேள்வி நம் மனதில் உதிக்காதா...?
என்ன தான் தொலைக்காட்சி அலைவரிசைகள்
விளம்பர நோக்கத்துடன் நடந்துக் கொண்டாலும் குறைந்த பட்சம் சமூகப் பொறுப்புக்காக, நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதிலாவது நேர்மையையும், நேரத்தையும் கடைப்பிடிக்கலாமே....
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
இதுக்குதான் நான் எதையும் பார்க்குறது இல்ல...
ReplyDeleteபார்க்காதது உத்தமம் தான். இருப்பினும் இது நம்மைச் சுற்றி நடப்பதை தாங்கிக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் வருங்காலத் தலைமுறைகள் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் வளர்கிறார்கள்
Deleteஇது எவ்வளவோ பரவாயில்லை... வேறு சேனல்களில் 10 நிமிடங்களுக்கொரு ஒரு முறை 5 நிமிட விளம்பரம்... தொலைக்காட்சி... சரியான தொல்லைக்காட்சி... நான் பார்ப்பது எப்போதாவது... பகிர்வுக்கு நன்றி....(TM 3)
ReplyDeleteநானும் எப்பொழுதாவது தான் பார்ப்பது, ஆனால் இந்த அலைவரிசைகள் எப்பொழுதுமே இப்படி தான் என்று இப்பொழுது தான் தெரிகிறது
Deleteகல்யாணத்தில் மட்டுமல்ல, எதிலும் கலாட்டாதான்.
ReplyDeleteஇதுதான் நம்நாடு
சகாதேவன்
அருமை நண்பரே, நேர்த்தியான வார்த்தைப் பிரயோகம்
Deleteகலாட்டா கல்யாணம்,நம் நாடு இரண்டையும் அருமையாக கையாண்டிருக்கிறீர்கள்