9.16.2012

சித்திரப் பெண்ணழகே !


சித்திரப்  பெண்ணழகே ! உன்னை
என்  சிந்தையில்  வைத்திடவே
கண்மலர் பூத்தி டம்மா  பாவையே
பார்வை  ஒருங்கிடவே

என்னையே  மனதில்  வைத்தாய்
என்னுடன்  நினைவையும் 
சேர்த்து  வைத்தாய்
கண்ணிலே  காதலையே  கன்னியே
என்னுள்  ஏன்  வைத்தா
காலத்தின்  வர்ணணையில்  கன்னியே
காதலின்  சொல்லினிக்கும்
வாழும்  தீரத்தில்  உள்ளதடி
நம்  காதலின்  கண்ணியமே

சேர்ந்து  பிரிந்திடினும்
பிரிந்து  சேர்ந்திடினும்
இருக்கும்  பொழுதினிலே
ஆன்மா  இன்பம்  களிக்குமடி

சேர்ந்தப்  பொழுதினிலே
உன்  அன்பு  சாரம்  புரியலையே
உனை  பிரிந்த  காலத்தினிலே
உனை  தவிர  யாரும்  தெரியலையே

சோகத்தின்  ஆழத்திலே
உயர்  காதல்  புரியு மடி
அது  காமத்தின்  இன்பத் திலே
ஊறி  மகிழு  மடி 

மனதில்  பாட்டு  உதிக்கு  தடி
நீ  என்  பக்கமிருக்கையிலே
அதனுள்  இசையும்  இணையு தடி
நீ  என்னை  விட்டுப்  பிரிகையிலே

உள்ளத்தில்  குற்றமெதுவுமில்லை
உன்னுடன்  கூடி  மகிழ்வதிலே
ஊடலில்  உனக்கு  நிகருமில்லை
குற்றமுண்டா!  உன்னைப்  புகழ்வதிலே



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

6 comments:

  1. உள்ளத்தில் குற்றமெதுவுமில்லை
    உன்னுடன் கூடி மகிழ்வதிலே
    ஊடலில் உனக்கு நிகருமில்லை
    குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே...
    அற்புதமான வரிகள் வரிக்கு வரி ரசிக்கும் படியாக.

    ReplyDelete
  2. கல்லூரி நாட்களில் பாரதியாரின் சில வரிகளில் மனம் லயித்து எழுதிய வரிகள். உங்களின் பாராட்டிற்கு நன்றி ச்கோதரி

    ReplyDelete
  3. நல்ல வரிகள்

    மிகவும் பிடித்தவை :

    /// சேர்ந்தப் பொழுதினிலே
    உன் அன்பு சாரம் புரியலையே
    உனை பிரிந்த காலத்தினிலே
    உனை தவிர யாரும் தெரியலையே

    சோகத்தின் ஆழத்திலே
    உயர் காதல் புரியு மடி ///

    பழைய நினைவுகளை மீட்டியது...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  4. கவிதை அருமையா இருக்கு. தமிழ்த் தொட்டில்ங்கற உங்க தளத்தோட பெயரே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மின்னல் வரிகளால் என் கவிதைக்கு கருத்துக்கள் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி.

      தமிழ்த்தொட்டில் 5 வருடத்தில் இது பிடித்திருக்கு என்று சொன்ன ஒரே நபர் நீங்கள் தான். மிக்க நன்றி

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts