11.18.2011

கிரிக்கெட்டும் வாழ்க்கையும் தத்துவம்

 


 கிரிக்கெட்  இன்று பெரும்பாலான இந்தியர்களின் தேசிய கீதமாகவே இருக்கிறது. அதுவும் நம் இந்திய அணியினர் இந்த வருடம் உலக கோப்பையை வென்றதில் இருந்து இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருப்பினும் கிரிக்கெட்டை வெறுப்பவர்கள் இந்தியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டை முட்டாள்கள் தான் பார்ப்பார்கள், இன்னும் பல வகையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும். இன்று பணம் கொழிக்கும் தொழிலாகவே உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது.


     அப்படிப்பட்ட கிரிக்கெட்டையும் வாழ்க்கையையும் சம்மந்தபடுத்தி சமீபத்தில் பேச்சாளர் சுகி சிவம் அவர்கள் ஒரு பட்டிமன்றம் ஒன்றில் பேசினார். மிக அருமையாகவும்,நகைச்சுவையாகவும் இருந்தது. அதை உங்களிடமும் இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
     ஒரு பந்தை வேணடாம் வேண்டாம் என்று மட்டையால் விரட்டுகிறான் ஒருவன் ( பேட்ஸ் மேன்) இருப்பினும் பவுலர் அவனுக்குத் தான் பந்து போடுகிறார். அவன் பின்னே பந்தை பிடிக்க வேண்டும் என்று தவம் கிடக்கும் கீப்பருக்கு பந்தைப் போட மறுக்கிறான்.வாழ்க்கை நமக்கு கேட்டதைக் கொடுப்பதில்லை. வேண்டாம் வேண்டாமென்று எதை நினைக்கிறோமோ அதை தான் கொடுக்கிறது.
மட்டையாளன் (பேட்ஸ் மேன்)பந்தை அடிப்பதைப் பிடித்து மீண்டும் அவனுக்குத் தொல்லைக் கொடுக்க பத்துப் பேர் அவனைச் சுற்றி நின்றுக் கொண்டிருக்கின்றனர்.வாழ்க்கையில் நமக்கு வேண்டாததை நம்மிடம் திணிக்க எத்தனைப் பேர் நம்மைச் சுற்றி நிற்கின்றனர்.
     உண்மையில் மட்டையாளனை ஆட வைக்கவா சுற்றியிருக்கும் பத்துப் பேரும், அவனுக்குப் பந்து எறிபவனும் முயல்கிறார்கள்....?
     அவனுக்கு குழிப் பறிக்க அல்லவா முயல்கிறார்கள். அவனை வீழ்த்த அல்லவா, பதினொரு பேரும் முயல்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு பந்தும் மட்டையாளனை வீழ்த்தவே எறியப்படுகிறது. எதிரியின் ஒவ்வொரு பந்திலும் தான் மட்டையாளனின் புகழும், இகழும், வெற்றியும், தோல்வியும் அடங்கியிருக்கிறது. எதிரியின் பந்தினால் மட்டுமே நாம் வெற்றியையோ தோல்வியையோ பெற முடியும்.வாழ்க்கையிலும் அப்படித் தான். இதையெல்லாம் தான்டி நமக்கு ஒரு தர்மசங்கடம் இருக்கிறது.
     அது நம் நண்பன் செய்யும் துரோகம். எதிரின் பந்து தான் நம்மை வெளியேற்றவோ, நிலைநிறுத்தவோ செய்யும் என்றில்லை. நம்முடன் ஒடும் கூட்டாளிப் போதும் நம்மை கவிழ்ப்பதற்கு. ரன்கள் ஓடும் பொழுது சரியாக உதவவில்லையென்றால் அவ்வளவு தான். நாம் வெளியேற வேண்டியது தான். இருப்பினும் கூட்டாளி எப்பொழுது கவிழ்ப்பான் என்று நம்மால் அறிய முடியாது. எதிரியைப் பற்றி கவலை இல்லை. அவன் எறியும் ஒவ்வொரு பந்திலும் அது தெரிந்துவிடும்.
     நம் வாழ்க்கையும் இப்படித் தான் எதிரிகளை வைத்து தான் நாம் முன்னேற முடியும். அதே போல் நம்முடைய கூட்டாளிகளினாலும் நாம் சீரழிய முடியும் . எனவே எதிலும் கவனம் தேவை.
     மட்டையாளன் ஒவ்வொரு பந்திலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமின்றி அதே பந்தில் ரன்கள் பல சேர்த்து வெற்றிப் பெறுவது போல், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நாம் பயன்படுத்தி வெற்றியைப் பெற முயற்சிக்க வேண்டும்.


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

5 comments:

  1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. நிச்சயமாக வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்த வேண்டும்... நீங்கள் சொன்னதைபோல வெற்றியைப் பெற முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி Priya

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts