• 11.17.2011

  என் உயிர் நாதம்


  நீ கேட்பதற்காகவே வைத்த என்

  அலைப்பேசியின் ஒலி நாதத்தை

  உன்னைத் தவிர எல்லோரும் கேட்கிறார்கள்…

  நீ மட்டும் இன்னும் கேட்கவில்லை

  தவறாக என் எண்ணுக்கு அழைக்கும்

  நபர்கள் கூட சரியாக கேட்கும் என்

  அலை நாதத்தை நீ மட்டும் இன்னும்

  ஒரு முறைக் கூட

  கேட்காதது வருத்தம் தான்…

  என்றேனும் நீ என் அலைப்பேசி

  எண்ணுக்கு அழைக்கும் பொழுது

  இந்த ஒலி நாதத்தை நீ

  நிறைய முறைக் கேட்பாயெனில்

  நான் எடுக்க இயலாமல் இருக்கிறேன்

  என்று எண்ண வேண்டாம்

  உயிரோடு இருக்க முடியாமல் இருக்கிறேன்

  என்பதை எண்ணிக் கொள்ளடி

  என் அன்பு காதலியே…

  அந்த ஒலி நாதம்  உனக்கு சொல்லும்

  என் உயிர் நாதம் நின்று விட்டதை

  அந்நொடி..
   
   
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே