• 11.16.2011

  விலையினைக் கொடுத்தா ஞானம் வாங்குவது


   
  விதைகளை விற்று
  விறகுகள் வாங்குகிறோம்
  சதைகளை வளர்க்க
  எலும்பினைத் தேய்கிறோம்
  விலையினைக் கொடுத்தா
  ஞானம் வாங்குவது
  மலரனில் தேய்தா
  முற்களைக் கூராக்குவது
  இந்திர வலிமையால்
  இயக்கத்தை இழக்கிறோம்
  தொழில் மூலப்பொருளை
  பலர் ரத்தத்தில் எடுக்கிறோம்
  பணம் பார்க்கும் பன்னாட்டு
  வாணிபத்தில் மனிதத்தை தொலைக்கிறோம்
  இந்நாட்டு பொருளை ஏளனம் செய்துவிட்டு
  வல்லரசை நோக்கி பயணிக்கிறோம்
  தொடரட்டும் பயணம் கால்கள்
  செயலிழக்கும் வழி விபரிதங்களால்.....  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே