7.19.2012

உன்னுடைய இருத்தலின்றி

 

என்னுடைய பகற் பொழது உன்
இரவை விட மிகவும் இருள்
மயமானது.
எந்த சலனமுமின்றி நிசப்தமாய்
நகர்கிறது.

என்னுள் எந்த எண்ணமும்
தோன்றிவிடாமல் எனகுள்ளேயே
ஒரு புழுக்கம் எப்பொழுதுமே
என்னை அணைத்தபடி இருக்கிறது.
பொழுதுகளின் வேறுபாடறிய முடியாமல்
இரவுகளின் சலனமற்ற சாலைகளில்
ஒளியைத் தேடி அலைகிறேன்
கண்கள் இருப்பதையே மறந்து விடும்
நொடிகளில் தான் உணர முடிகிறது
உன்னுடைய இருத்தலின்றி என்னுள்
எதுவுமே நிகழாதென்று



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

10 comments:

  1. அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பது நினைவிற்கு வருகிறது.பிடித்தது..வாக்கிட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சக்தியில்லையேல் சிவமில்லை.உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. மிக அருமை நண்பா......

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. அழகான வரிகள் அழகுக்கு அழகு சேர்க்கிறது

    ReplyDelete
    Replies
    1. சிட்டுக்குருவி காதலின் தவிப்பு என்றுமே அழகு தான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே

      Delete
  4. அருமையான வரிகள்...
    உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
    Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்.
    பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  5. //உன்னுடைய இருத்தலின்றி என்னுள்
    எதுவுமே நிகழாதென்று
    // காதல் வந்த பின் இவை நடக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம் கொள்ள வேண்டும் ..........

    அழகியல் ................அற்புத உணர்வுகளின் கொத்து

    ReplyDelete
    Replies
    1. கோவை மு.சரளா உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts