• 8.27.2012

  அந்தப் பயணம்

   
  வெண்மேகம் புன்னகைக்க
  தொடுவானம் முகம் சிவக்க
  வாழ்த்துச் சொல்லிச் சென்ற
  சூரியனை வழியனுப்பி வைக்க
  சிற்றொளியோடு நிலவு வந்த
  அந்த நேரம்

  மாலைப்பொழுதில் சாலைகளெல்லாம்
  வாகனங்களும் மனிதர்களும்
  நிறைந்திருந்த அந்த இடத்தில்
  ஒரு தனிமையை
  உணர்ந்தேன்
  ஒரு புதுமையைக் கண்டேன்
  துவலவிட்ட உன் துப்பட்டா
  துவண்டு வந்த என் மார்பில்
  பட்டதும் துடித்த என் உணர்வுகளை
  யாரும் அறிய முடியாது.
  விலகாமல் வைத்திருந்திருக்கலாம்
  என் மனதை ஆனால்
  விலகி வந்த உன்னாடை
  விடவில்லையே
  அது போதாதென்று
  அந்தப் பளிச்சிடும் முகத்தில்
  ஒரு ஒளிர்ந்திடும் சிரிப்பு வேறு
  விட்டு வைக்கவில்லை என் மனதின்
  கொஞ்ச மிச்சங்களையும்
  ஆம் அந்த சாலையின் ஓரத்தில்
  பேருந்து நிறுத்தத்தில் என்னுடனே
  நீயும் காத்திருப்பாய் என்று
  நான் நினைக்கவில்லை
  முதலில் வந்த பேருந்து
  என்னை மூச்சிரைக்க வைத்தது
  நல்ல வேளை நீ ஏறவில்லை
  திரும்பி என்னைப் பார்க்காமலாவது
  இருந்திருக்கலாம்
  அது என்ன
  அந்த களவாடும் பார்வை
  என்னை என்னவோ செய்கிறதே
  நேரடியாகத் தான்
  பார்த்துவிட்டுப் போயேன்
  ன்னால் தான் முடியவில்லை
  அடுத்து வந்தது நான் செல்ல
  வேண்டியப் பேருந்து எனக்கு
  ஏற மனமில்லை இருந்தும்
  ஏறினேன்
  பின்னே அவளும் ஏறினாள்
  ஏன் இந்த பேருந்தில் ஏறினாய்
  நீயும் எந்தன் ஊர்ரைச் சேர்ந்தவளோ ...!
  என்ற கேள்வி மனதில்
  அப்படி இருக்கக் கூடாதா...?
  ஒவ்வொரு நிறுத்தம்
  வரும் பொழுதும்
  பேருந்தின் வெளியெ
  பார்த்தேன் என்ன ஆச்சர்யம்
  நீ இறங்கவில்லை
  கடைசியாக என்னுடைய
  ஊருக்கு முன் ஒரு
  நிறுத்தம் வந்த பொழுது
  நீ எழுந்து நின்றாய்
  இருக்கையில் இருந்து
  ன் மனது வேகமாக
  சொன்னது இவள் இங்கே
  இறங்கக் கூடாதென்று
  ஆம் அப்படியே தான் நடந்தது
  நீ அடுத்த நிறுத்தத்தில்
  இறங்குவதற்காகத் தான்
  எழுந்து நின்றாய் எனபது
  நீ இறங்காததில் இருந்து
  புரிந்தது
  ஆனால் நான் இறங்காததை
  நீயும் கவனிக்கிறாய் எனபதை
  நான் அந்நொடி தான் உணர்ந்துக்
  கொண்டேன்
  மனதில் இன்பப் பூரிப்பை
  சுமந்த நேரம்
  நிறுத்தம் வந்து விட்டது
  நீயும் இறங்கினாய்
  நானும் இறங்கினேன்
  ஓரே ஒரு முறை என்னை
  நேரடியாக உற்றுப் பார்த்தாய்
  அப்பொழுது கூட நான் உன்னை
  சரியாகப் பார்க்கவில்லை
  பார்த்த பார்வை என் மனதில்
  பதிவதற்குள் நீ மறைந்துவிட்டாய்
  திரும்பவும் அந்தப் பயணம்
  வரக்கூடாதா என்ற ஏக்கத்தை
  னக்குள் தந்துவிட்டு....  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே