செந்தூரப் பொட்டினிலே
சிங்காரச் சிரிப்போடு
என் மந்தார மனதையே
மயக்கினாள் மாயமாய்
கண்ணான கன்னியொருத்தி...
விழியாலே கோலமிடும்
வித்தைகள்
கற்றுள்ளாள்
புழுவான என் மனதை
புருவத்தாலே
வாட்டுகிறாள்’’
சுவையான ராகமொன்றை
நாவினிலே இசைக்கின்றாள்
அதில் கனிவான சுரமொன்றை
என் காதருகே படிக்கின்றாள்
ஒளியான நிலவு போல்
பல கவிதை சொல்கின்றாள்
அதில் நிலையான என் மனதை
நிலைக் குலைத்துச் செல்கின்றாள்.
கண்ணான கன்னியொருத்தி...
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
//புருவத்தாலே வாட்டுகிறாள் // என்று ரசித்து எழுதி உள்ளீர்கள்...
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்... (TM 2)
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே
Deleteம்ம்ம் நடத்துங்க நடத்துங்க நண்பா .. அருமையான கவிதை .. உணர்ந்து எழுதி இருக்கீங்க
ReplyDeleteம் நடத்துங்கன்னா என்ன அர்த்தம் நண்பா ..? தவறாக எதுவும் நடக்க வில்லை. ஏதோ நீங்கள் எல்லாம் இருக்கும் துணிவு தான். பாராட்டிற்கு மிக்க நன்றி அரசரே
Deleteஒளியான நிலவு போல்
ReplyDeleteபல கவிதை சொல்கின்றாள்
அதில் நிலையான என் மனதை
நிலைக் குலைத்துச் செல்கின்றாள்.
என்ன சொல்ல நிலை குலையத்தான் செய்கிறது.
விடை சொல்வீர்கள் என்றுப் பார்த்தால், நீங்களும் கேள்வியுடனே நிறுத்துகிறீர்களே சகோதரி.
Deleteஅன்புள்ள தமிழ் ராஜா,
ReplyDeleteஒரு வாரமாக உங்கள் வலைத்தளத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். இன்று அகப்பட்டீர்கள்! உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
என் வலைத்தளம் :ranjaninarayanan.wordpress.com
உங்கள் கவிதை படித்ததும் யாரவள் என்ற கேள்வி பிறக்கிறது, ராஜா!
நல்ல கவிதை! பாராட்டுக்கள்!
”அன்புள்ள தமிழ்ராஜா”
Deleteஇப்படியொரு அன்போடு வந்த முதல் பின்னூட்டம் உங்களுடையது தான். அம்மா எனது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
யாரவள் என்ற கேள்விக்கு பதில் என் கவிதைகள் தான். தொடர்ந்து என் கவிதைகளை படித்து ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.