நிலவை நின் முகம்
சுமக்க
வானை நின் மேனி
ஒளிக்க
மலர் பாதம் கொண்டவளே
உன் பருவத்தேர் மீது
துரித சாரதியாய்
வீசுங்காற்றை
துளை செய்யவா...
உன் காதல் வழி
செல்லவா...?
பூவின் நடை பயணம்
உன் மார்பின்
விளிம்புகளில்
தோணி போலுந்தன் பருவ
ஆற்றினில் மிதந்து
மகிழ்ந்தாடவா
உன் மடியில்
தவழ்ந்தாடவா...
காதல் விழி சொல்ல’
காற்றை அது வெல்ல
கவிதை மொழி பேசவா...?
உன் மெளனம்
அதை வெல்லும் பா...
தூரல் அது மெல்ல
தூவி நீ நனைய
நீர்த் துளியும் கவிப்பாடுமே
உன் எழிலில் தவழ்ந்தாடுமே
பனியில் நீராடும் கொடியின்
சுகபாரம் நெஞ்சில் நிறைகின்றதே
உன் காதல் அதை வெல்லுதே...
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நன்றி... (TM 2)
ReplyDeleteகவிதை கவிதை..
ReplyDeleteஎன்ன ஆயிற்று...
Deleteஃபீலிங்ஸோ ஃபீலிங்ஸ்!
ReplyDeleteஆமாம் இருப்பினும் அதனுடன் தமிழும் கலக்கும் பொழுது இப்படி ஒரு வடிவம் கிடைத்துவிட்டது
Deleteம்.. அழகு...
ReplyDeleteகவிதை வீதியில் இருந்து என் வீதிக்கு ஒரு பாராட்டு வரவேற்கிறேன்.
Deleteஅருமையான கவிதை... வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே
Deleteபூவின் நடை பயணம்
ReplyDeleteஉன் மார்பின் விளிம்புகளில்
தோணி போலுந்தன் பருவ
ஆற்றினில் மிதந்து மகிழ்ந்தாடவா
உன் மடியில் தவழ்ந்தாடவா...
காதல் விழி சொல்ல’
காற்றை அது வெல்ல
கவிதை மொழி பேசவா...?
பேசுதே கவி அழகாய் பேசுதே.
அழகாய் பேசி உங்களின் பின்னூட்டங்களையும் வாங்கியதில் மகிழ்ச்சி
Delete