9.03.2012

அக்பரால முடியல, ஐன்ஸ்டீனாலக் கூட முடியல

     தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமென்று அம்ர்ந்தால் விளம்பரங்கள் தான் நம்மை பெரிதும் ஆக்ரமிக்கின்றன. சமீபத்தில் நான் பார்த்து யோசித்த ஒரு விளம்பரம்.
     சாக்லேட் ஹார்லிக்ஸின் ஒரு விளம்பரம். ஒரு சிறுவன் அகபர் வேடத்தில் பால் குடிக்க மறுக்கிறான்.ஐன்ஸ்டீன் வேடத்தில் இன்னொரு சிறுவன் அப்படியே பால் குடிக்க மறுக்கிறான். பின்னணியில் ஒரு குரல் ஒலிக்குது,

     அக்பரால முடியல.... ஐன்ஸ்டீனாலக் கூட முடியல....
     உடனே ஒரு பெண்மணி வந்து சாக்லேட் ஹார்லிக்ஸைப் பற்றி சொல்கிறார்.
     இது எதைச் சொல்கிறதோ இல்லையோ குழந்தைகளுக்கு செயற்கைப் பால் பிடிக்கவில்லை எனபதை தெளிவாக சொல்கிறது
     இதில் நான் கவனித்தது. உண்மையில் பால் அருந்துவதால் எந்த நன்மையும் இல்லை என்று தான். ஆம் நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் பால் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு உணவு என்று சொல்லியிருக்கிறது.
     உயிரினங்களில் மனிதன் மட்டுமே வளர்ந்த பின்னும் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். நம் உடலுக்கு ஏற்றப் பால் தாய் பால் மட்டுமே. பிறகு நமக்கு பால் அவசியமே இல்லை.
     ஏனெனில் நாம் பயன்படுத்தும் மாட்டின் பால் கன்று வளர்வதற்குரிய காரணிகளை உள்ளடக்கியது. பசுவின் பால் 8 கிலோ எடையுடன் பிறக்கும் ஒரு கன்றுக்குட்டியை 50 கிலோவாக மாற்றத் தேவையான சத்துக்களும், வளர்ச்சித்தூண்டிகளும் அடங்கியது. அதை நாம் குடிக்கும் பொழுது செயற்கையான முறையில் வளர்ச்சித்தூண்டிகள் வருகின்றன. அதிகப்பட்ச சத்துக்கள் உடலில் தேங்கி உருவாகிறது. புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை பெரியவர்கள் கொட்டைகள் பருப்புகள் மூலமே பெற முடியும். சிறு குழந்தைகளுக்கு நீர்க்க வைத்த பால் கொடுக்கலாம். பெரியவர்கள் முழுமையாகவே தவிர்த்துவிட வேண்டும்.
     பாலும் சீனியும் வயிற்றுக்குள் சென்றதுமே புளிக்கின்றன.அமிலமாக ஆகின்றன. அவை நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பவை.
     பாலை நிறுத்தினாலே உடல் எடை குறைவதைக் காணலாம்.உடற் சோர்வை அளிக்கும் பிற உணவுக் கட்டுபாடுகளைத் தளர்த்திக் கொள்ளலாம். பாலைக் குறைத்தால் பெரும்பாலான வயிற்றுச் சிக்கல்கள் இல்லாமலாவதை எவருமே உணரலாம்.
      
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

6 comments:

  1. பழக்கப்படுத்தி விட்டார்களே... என்ன செய்வது...?

    ReplyDelete
    Replies
    1. வேறு வழியில்லை. மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும்.இல்லையெனில் மருந்தை உட் கொள்வதையே பழக்கமாக்கிக் கொள்வார்கள்

      Delete
  2. தேவையான பதிவு நண்பா..

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவின் மூலம் பால் நம் உடல் நலத்திற்கு தேவையில்லாதது என்று சிலப் பேர் உணர்ந்தாலேப் போதும்

      Delete
  3. அவசியமான பதிவு நண்பா ........

    இந்த உண்மை புரியாமல் காலையில் எழுந்ததும் குழந்தைக்கு பாலை மட்டும் குடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள் அதற்க்கு மேல் குழந்தையால் வேறு உணவுகளை உண்ண முடியாது மந்த தன்மையுடன் இருப்பார்கள் பால் டீ குடிப்பவர்கள் கூட அதற்க்கு பதிலாக கருப்பு டீ அல்லது சீராக தண்ணீரை சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் உடலுக்கும் நல்லது ..........நல்ல பயனுள்ள ஒரு பதிவை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கருப்பு டீ,அல்லது தனியா டீ,துளசி டீ அருந்தலாம். அதுவும் சர்க்கரைய தவிர்த்து கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts