10.13.2011

சமூக ஒழுக்கம்: பெருமைக் கொள்வோம் இந்தியர் என்பதில்.



ஜம்மூ காஷ்மீர் தொடர்பாக,பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தால் கோபமடைந்த இரு வாலிபர்கள் அவரை அடித்து உதைத்தனர். சுப்ரீம் கோர்ட் சேம்பரிலேயே இந்த சம்பவம் நடந்தது.
பத்திரிக்கையில் ஒரு செய்தி, படித்துவிட்டு மக்கள் உச்” கொட்டிவிட்டு சிறிது நாட்களில் மறந்துவிடுவர். ஒரு நபருக்கு கொடுக்க வேண்டிய தண்டைனையைப் பற்றி கருத்துத் தெரிவித்ததில் நடந்த வன்முறை செயல் இது. தூக்குத் தண்டையை ரத்து செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிலும் சில இடங்களில் போராட்டம் நிகழ்ந்தது. ஜம்மூவிலும் அதைச் சார்ந்தே போராட்டம் நிகழ்கிறது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த ஒரு வழக்கறிஞர் மேல் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

நானோ தொழில்நுட்பத்தினால் உடல் தானம் அவசியமற்றுப் போகும்:




     இன்று நாம் என்ன தான் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்தாலும், மனித சமுதாயத்தையே மிரட்டிக் கொண்டிருக்கும் சில கொடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழியை இன்னும் நாம் கண்டறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் “ ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற சிறந்த மனிதரை நாம் கணையப் புற்று நோய்க்கு பலிக் கொடுத்திருக்க மாட்டோம்.

10.07.2011

மின்சாரத்திற்கு நிரந்த தீர்வு எப்பொழுது?





தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை,கூடங்குளத்தில் அணுமின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம், சென்னையிலும் கல்பாக்கம் அணு மின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம். அமெரிக்காவின் “வால் தெரு” போராட்ட்த்திலும் அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை என்று அணு உலையை எதிர்க்கும் போக்கு வலுத்துக் கொண்டே செல்கிறது. உண்மையில் இது சரி தானா?
வள்ளுவர் சொன்னது போல
     குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
      மிகை நாடி மிக்க கொளல்

வாகை சூட வா...


திரைவிமர்சனம்: வாகை சூட வா...

     வாகை சூட வா...    பெயரிலேயே தமிழின் சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் புறத்திணையை நினைவுப்படுத்துகிறார் இயக்குனர் சற்குணம். அந்த பெயருக்காகவே படத்தைப் பார்க்க வேண்டுமென திங்க கிழமை காலையிலேயே அருகிலிருக்கும் திரையரங்கிற்குள் சென்றேன். எதிர்பார்த்த கூட்டம் இல்லை தான். எப்பொழுதும் நல்ல படங்களுக்கு கூட்டம் வர சிறிது காலம் பிடிக்கும் தான். எதிர்பார்ப்புடனே டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு திரையரங்கிற்குள் சென்று அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே திரைப்படம் ஆரம்பித்துவிட்டது. எல்லா படங்களுக்கும் வரும் சிலுமிச ஜோடிகள் இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை.

2.13.2008

காதல் சிறை




உன் கனவு... உன் நினைவு...


தூங்கும் பொழுதல்ல உன் கனவு
என்னை தூங்க விடாமல் செய்கிறது
உன் கனவு விழிக்கும் பொழுது மட்டுமல்ல
உன் நினைவு எப்பொழுதும்
விழித்துக் கொண்டே இருக்கிறது
உன் நினைவு











காதல் விழி


தூக்கம் மறக்கும் உனது விழிகள்
என் விழியில் விழிப்பு கொள்வதால்
என் தூக்கம் தூங்க விழிகள்
உன் விழியை தேடி அலையும்
என் விழியில் விழிக்க நீயும்
உன் விழியில் தூங்க நானும்
பார்வையின்றி அலைந்தோம்
காதல் விழியில் பார்வைப்பெற்றோம்.
























ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னைப் பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!








அழைத்து செல்வாயா ?






வேகமேடுக்கும் உன்விழிகளின்
பார்வையில் என் நினைவுகளையும்
சேர்த்து அழைத்து செல்வாயா?
உன் உள்ளத்தில் பயனியாக
வர அனுமதி கேட்கிறேன்
பாலைவனத்தில் தனியாக
சிக்கித்தவிக்கும் நான்
வழியுமின்றி விழியுமின்றி
கிடக்கிறேன்
அழைத்து செல்வாயா ?
உன் நீண்டநேசப் பயணத்தில்.......................




என்னுயிர் நின்று விடும்















உன் உள்ளத்துப் பயணியாக
வந்த என்னிடமே செல்லவழி
கேட்கிறாயே பெண்ணே!
எங்கேயாவது செல்................
பயணத்தை நிறுத்தி மட்டும்விடாதே
என்னுயிர் நின்று விடும்.........




அதிசயம் தானே நான்..


















சாவையருகில் பார்த்ததாக பலர்
சொல்லியிருக்கிறார்கள்
நானோ சாவையே பார்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ உள்ளே வந்தாயே
அந்நொடியே என்னுயிர்
பிரிந்து விட்டது
இருந்தும் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்பெண்ணே !
அதிசயம் தானே நான்.....................






என்னை மீட்டுக்கொடு!














உன் துப்பட்டாவால் நான் விழுந்தேன்
அன்பே என்னை தூக்கி விடு!
உன் இருவிழி பார்வையில் எனை மறந்தேன்
அன்பே என்னை மீட்டுக்கொடு!
ஓருயிர் தானே எனக்குள் இருப்பது
இருயிர் சுமக்க இதயத்தில் இடமெது
கருவினில் கூட இருயிர் தோன்றும்
என் இதயத்தில் என்றுமே ஓருயிர் தான்
அதுவும் என்றும் உன்னிடம் தான்






மறுப்பிறப்பெடுக்குதே.............

உன் கண் இமைக்குதே
எனை சிறை வைக்குதே
உன் இதழ் திறக்குதே
அது கவி படைக்குதே
நீயும் புன்னகைக்கையில்
என்னுயிர் மறுப்பிறப்பெடுக்குதே.............




காதல் சுடுமோ!


காதல் சுடுமோ! கண்ணீர் வருமோ!
கனவும் நினைவும் கவலையை தருமோ!
மறதியும் மனதில் மறைவின்றி எழுமோ!
முற்களின் வலியை பூக்கள் தருமோ!
சொற்களும் சுமையாய் நெஞ்சினில் விழுமோ!
என்னவளே!
அடி என்னவளே!
ஒரு சொல் சொன்னாய் என் நெஞ்சுள்ளே........
வாழ்ந்தது போதும் என்று நினைப்பது போல்........




யாரிடமும் சொல்லிவிடாதே!



என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்.................
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!






ஒரு முத்தம் கேட்டேன்













உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்
உன்னுடைய முத்தம் அவ்வளவு
அழுத்தமான சத்த முத்தமோ!
என்றேன்..............
உன்னீரு கண்களால் என்னை
எரித்து விடுவதைப் போல
பார்த்தாய்...................
உன் கோபம் நான் சொன்ன
உண்மையிலா! இல்லை
சொல்லாது விட்ட பொய்யிலா!
என்றேன்எது உண்மை? எது பொய்?
தெரியாதவள் போல் கேட்டாய்
நீ கொடுப்பதாய் சொன்ன
உன் முத்தம் உண்மை
நீ கோபிப்பதாய் நடிக்கும்
உன் கண்கள் பொய்யென்றேன்
மௌனமானாய்!!
இந்த மௌனம் முத்தத்திற்கான
சம்மதமோ! கேட்டேன்
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ
உன் வெட்கத்தின் அழகை
காணத் தானே இத்தனை
முயற்சியும்
மகிழ்ச்சியில் நான்..............




தலைவணங்குகிறது



கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது.........
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று.......................













அனுமதிப்பதில்லை



கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய.................




என்னைப் பார்த்து நீ......




துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ........
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ......
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது

1.18.2008

நட்பின் வலி



என்ன நீர் ?






தேங்கிய கவலையினை
நீரோடையாய்
ஓடும் உன் நேசத்தில்
கரைத்திட வந்தேன் நண்பா!உனை காண...
கண்ணில் என்ன நீர் ?என்று எனை கேட்க வைத்து விட்டாயே














துரோகியாக நினைக்காதே!


எதிர்ப்பார்க்க என்னிடம் என்ன
இருக்கிறது நட்பைத் தவிர...
அபிப்ராயம் மாறும் பொழுது
உன் போல் இல்லையென்று
எனை விலக்கும் முறை சரியோ?
நீ பேசும் வார்த்தைக்கு
அர்த்தங்கள் நானாகலாம்
வார்த்தையே நானாகனுமென்று
நீ சொல்வதில் அர்த்தமில்லை
நண்பா! சூழலுக்குள் சிக்கி
எனை நீ எதிரியாக நினைக்கலாம்
துரோகியாக நினைக்காதே!
நாம் பிறந்ததே அர்த்தமற்றுப் போகும்










பேசாத வார்த்தைகள்
பேசாத வார்த்தைகள் வன்முறை
செய்வது நட்பில் தான்

மறைவான வார்த்தைக்கும் மதிப்பு
கூடுவது நட்பில் தான்
இருப்பினும் உதடுகள் திறக்காமல்
மௌனம் கொள்வது
"உன்னை மனதில் இருந்து விலக்க அல்ல"
என்று சொல்லத் தான் முடியவில்லை


























உடைந்த மொட்டுக்களாய்
பூத்த நம் நட்பு
உடைந்த கண்ணாடிப் போல்
தூளாகுமென்றால் மொட்டுக்கள் உடையாமல்
பூக்களை பாதுகாக்க
நான் தயார்
நீ?

1.17.2008

பூக்களின் பாதுகாப்பு










பேசாத வார்த்தைகள்
பேசாத வார்த்தைகள் வன்முறை
செய்வது நட்பில் தான்
மறைவான வார்த்தைக்கும் மதிப்பு
கூடுவது நட்பில் தான்
இருப்பினும் உதடுகள் திறக்காமல்
மௌனம் கொள்வது
"உன்னை மனதில் இருந்து விலக்க அல்ல"
என்று சொல்லத் தான் முடியவில்லை







உடைந்த மொட்டுக்களாய்
பூத்த நாம் நட்பு
உடைந்த கண்ணாடிப் போல்
தூளாகுமென்றால் மொட்டுக்கள் உடையாமல்
பூக்களை பாதுகாக்க
நான் தயார்
நீ?

Popular Posts