8.29.2012

நெஞ்சில் நிறைகின்றதே

 
நிலவை நின் முகம் சுமக்க
வானை நின் மேனி ஒளிக்க
மலர் பாதம் கொண்டவளே
உன் பருவத்தேர் மீது
துரித சாரதியாய் வீசுங்காற்றை
துளை செய்யவா...
உன் காதல் வழி செல்லவா...?

8.28.2012

பூத்துக் குலுங்குது நந்தவனம்

 
பூத்துக் குலுங்குது நந்தவனம்
அதைப் பார்க்கத் துடிக்குது எந்தன் மனம்
எனை சேர்த்தழைக்கிற உந்தன் குணம்
சந்தனக் குடியில் தேனின் மணம்

8.27.2012

அந்தப் பயணம்

 
வெண்மேகம் புன்னகைக்க
தொடுவானம் முகம் சிவக்க
வாழ்த்துச் சொல்லிச் சென்ற
சூரியனை வழியனுப்பி வைக்க
சிற்றொளியோடு நிலவு வந்த
அந்த நேரம்

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த கவிதைத் துளிகள்

      இன்று தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த சந்திப்பு ஒரு பெரும் விழாவாகவே இனிதே  நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாத தமிழ் பதிவர்கள் இணையத்தில் இந்த நிகழ்வைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

8.24.2012

அன்றைய மகாபாரதமும் இன்றைய யுகபாரதமும் (2)


 
:
     நான் சென்ற கட்டுரையில் எழுதியதை ஒரு நண்பர் படித்துவிட்டு என்னிடம் பேசினார். நான் எழுதியதில் தவறு இருக்கிறது என்று முறையிட்டார். உண்மையில் மகாபாரதத்தில் கண்ணன் அர்சுனனுக்கு பகவத் கீதையை உரைப்பது போல் காட்சி இல்லை. அந்தப் போர்க்களத்தில் அந்த உரையாடல் அவசியம் அற்றது என்றும் ஒரு கருத்து இருப்பதாகச் சொன்னார்.

8.21.2012

நீயா நானாவில் கனவுப் பற்றிய தெளிவும், தெளிவின்மையும்

 

     இந்தப் பதிவை சென்ற வாரமே எழுத நினைத்து எழுத முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இது என் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
     கனவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? என்ன நினைப்பது, அது தான் கனவாயிற்றே...

8.16.2012

அன்பின் வெளிப்பாடு

 
நீ சொன்ன பொய்யான 
வார்த்தைகளின்
மத்தியில் தான்
எனது காதலின் இருத்தல்
நிகழ்ந்தது என்று நான்
நினைக்கவே இல்லை.
உனது பொய்கள்
உனக்கான அன்பின் 
வெளிப்பாடு....!

Popular Posts