• 12.04.2011

  கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (3)


   
  வாள் வீச்சை சந்திக்கும் இந்த
  கண்கள் உன் விழி வீச்சை
  சந்திக்கும் துணிவை
  பெறுகையில் தான்
  எனக்கான வீரத்தை கற்றேனடி...

  போர்க்களத்திலும் எனக்கு
  வீழ்ச்சியில்லை
  இந்த காதல் களத்தில்
  வீழ்ந்ததைத்தான்  
  என் மனம் நித்தமும்
  பரிகாசம் செய்கிறதடி
  என்னை வீழ்த்துகின்ற
  எதிரியையும் விரும்பும்
  முரண்பாடான  தருணங்கள்
  இந்த காதலில் மட்டுமே
  நிகழும்  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே