• 12.07.2011

  இதமான இந்த பற்றுதலை...

   
  உண்மையில்
  காதலைத் தவிர வேறெது
  தரும் மனதிற்குள்
  இதமான  இந்த பற்றுதலை...

  எங்கே போகிறோம் என்றறியாமல்
  என் கைக்குள் உன் விரல்களை
  புதைத்து கேள்விகளின்றி
  என்னுடன் பயணிக்கும்
  உன்னைப் போல் ஒரு
  உறவு கிடைத்தால்
  உலகத்தில் காதலைத் தவிர
  வேறெதுவும் தேவையில்லை
  என்று தான் எண்ணத்
  தோன்றுகிறது
  பெண்ணே...!
  உண்மையில்
  காதலைத் தவிர வேறெது
  தரும் மனதிற்குள்
  இதமான  இந்த பற்றுதலை...
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே