எழுதிக் கொண்டிருக்கும் காகிதத்தில்
எங்கிருந்தோ வந்து
விழும் மழையின்
ஒற்றைத் துளி நீர் சிந்தி
நான் வாழ்ந்துக் கொண்டிருக்கும்
வாழ்க்கையில் எங்கிருந்தோ
வந்த உன் ஒரு துளி
நினைவால் கரைந்துவிடுகிறதடி
நினைவால் கரைந்துவிடுகிறதடி
என் எண்ணங்கள்...
காகிதத்தை பார்ப்பவர்களுக்கு
கரைந்துவிட்ட எழுத்துக்கள்
பளிச்செனத்தெரிவதுப் போல்
என்னைப் பார்ப்பவர்களுக்கு
நீ கரைத்துவிட்டுப் போன
என் எண்ணங்கள் தானடி
பளிச்செனத் தெரிகிறது
எப்படி மறைப்பது பெண்ணே!
உன் நினைவுகளால் கரைந்த
என எண்ணங்களை ...
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
நோ நோ அழக்கூடாது...
ReplyDeleteஎப்படி நண்பரே இந்த இரக்க குணம். எனினும் உங்கள் அன்பிற்கு நன்றி.
ReplyDelete"கரைந்துவிட்ட எழுத்துக்கள் பளிச்செனத்தெரிவதுப் போல்"
ReplyDeleteநண்பரே!!! கரைந்த "எழுத்துக்கள்" எப்பொழுதும் தெரியாது... அது கரைந்தது என்று தான் தெரியும்...
@Karthikeyan.B
ReplyDeleteநண்பரே!!! கரைந்த "எழுத்துக்கள்" எப்பொழுதும் தெரியாது... அது கரைந்தது என்று தான் தெரியும்...
நண்பரே மன்னிக்கவும், இப்பொழுது தான் தெரிகிறது. உங்களுக்கு விளக்க முடியாதபடி என் கவிதையின் வரிகள் இருப்பது என் தவறு தான்.
ஒரு காகிதத்தில் எல்லா எழுத்துக்களும் நன்றாகத் தெரிய, இரண்டு வாசகங்கள் மட்டும் கரைந்தபடி இருக்க, பார்ப்பவர்களுக்கு அந்தக் குறைபாடு தானே முதலில் பளிச்செனத் தெரியும். அதைத் தான் கரைந்துவிட்ட எழுத்துக்கள் பளிச்செனத் தெரிவதுப் போல் “ என்று எழுதினேன்.
உண்மையில் அந்த எழுத்துக்கள் போல் தான் இந்த கவிதையிலும் குறைபாடு பளிச்செனத் தெரிகிறது.
அறிந்தேன் நண்பா... இருப்பினும் எம்மைப்போன்று சிலருக்கு இந்த சந்தேகம் வர வாய்ப்புள்ளது... அதை தெளிவு படுத்தவே இப்படி ஒரு கேள்வி...
ReplyDeleteஉம் கவிதைகளை படித்து, ரசித்து, உன் தமிழ் ஆற்றலையும் அதன் மீது உனக்குள்ள காதலையும் உணர்ந்தேன்..
@Karthikeyan.B
ReplyDeleteஉங்களின் கேள்விக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே...