உன்னுடனான என் நிகழ்வுகளை
மட்டும் மனதின் ஓர்
மூளையில் சேகரிக்க நினைக்கிறேன்
முடியவில்லை
மனதின் முக்கியமான குறியீடுகளில்
உன் நிகழ்வுகளின் குறிப்புகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
இருந்தாலும்...
மனதில்
ஆழமாகவே நிலைத்திருக்கிறது
அதற்கான தலைப்பைத் தேடித்
தான் மனம் அடிக்கடி சோர்கிறது
காதலென்றோ? நட்பென்றோ?
இரண்டில் ஒன்றை மட்டும்
வைக்க என் மனம் விரும்பவில்லை
உடலியல் ஈர்ப்பைத் தாண்டி
உனக்கும் எனக்குமான
அன்பின் தேடல்கள்
மிக நீண்டது
இருப்பினும் உன் உருவத்தை
தாண்டிய அந்த அன்பின் தேடலை
நான் யாரிடமும் பெற இயலாது
என்றெண்ணும் பொழுது தான்
என்னவனே! இலக்கியங்கள்
சொல்வது போல்
இது ஒரு நோயா?
இதைத் தான் உலகம்
காதல் என்கிறதா…?
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
Nice one Sago.
ReplyDeleteஇதற்கு போர்தான் காதலா..
ReplyDeleteஅழகிய காதல் கவிதை
ReplyDelete//உன் உருவத்தை
ReplyDeleteதாண்டிய அந்த அன்பின் தேடலை
நான் யாரிடமும் பெற இயலாது
என்றெண்ணும் பொழுது தான்
என்னவனே! இலக்கியங்கள்
சொல்வது போல்
இது ஒரு நோயா?
இதைத் தான் உலகம்
காதல் என்கிறதா…?
//
அருமையான வரிகள்
இன்று
ReplyDeleteவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
@துரைடேனியல்
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே
@கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDeleteநண்பரே உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி
@"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteஉங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே