12.10.2011

மீண்டும் நாளைத் தொடரும்


பார்த்துக் கொண்டே  இருக்க
நான் என்ன தொலைக்காட்சியா?
என் பார்வையை மாற்ற வேண்டும்
என்ற எண்ணத்தில் கேட்டாய் நீ
ஆமாமென்றென்…!
என்னது நான் தொலைகாட்சியா?
எப்படி?
ஆமாம் நான் மட்டுமே பார்க்கும்
தொலைகாட்சி
என் ஒவ்வொரு செயலுக்கும்
நீ ஒவ்வொரு அலைவரிசைக்கு
மாறுகிறாய்
என்ன மற்றவர் பார்க்கும்
தொலைகாட்சியில் ஒரு
அலைவரிசையில் ஒரு நேரத்தில்
ஒரு நிகழ்ச்சியை மட்டுமே
பார்க்கலாம்.
உன்னிலோ நீ சிரிக்கிறாய்
என்று பார்க்கையில்
முறைக்கிறாய்
முறைக்கிறாய் என்று 
அலைவரிசையை மாற்றுகையில் 
சிணுங்குகிறாய்
விளக்கமாக ஒரு நிகழ்வில்லாத்தால்
உன்னில் ஒவ்வொரு நொடியும்
ஒரு புது உலகத்தையே பார்க்கிறேன்.
நான் பார்க்கும் இந்த தொலைகாட்சியை
இயக்க அத்தனை செலவு
தேவையில்லை.
துளி அன்பு போதும்
ஆயுள் முழுதும் என்னை
ஆனந்தத்தில் ஆழ்த்தும்
நிகழ்ச்சிகள் உன்னிலுண்டு
இடையில் விளம்பரங்களே
இல்லாத உணர்வான நிகழ்ச்சிகளை
எனக்கு எப்பொழுதும் ஒளிபரப்பிக்
கொண்டிருக்கும் நீ என்னுடைய
தொலைக்காட்சி தானேஎன்றதும்
அப்படியே இமைக்காமல்
வலது கையை உன் முகத்திற்கு
ஆதாரமாய் வைத்து என்னையே
பார்த்துக் கொண்டிருந்த
உன் கண்களை  நோக்கிக்
கையசைத்தேன் நான்.
நீயோ பிரம்மிப்பாய்
போதும்  கலா ரசிகரே…!
தலை சில்லென்று இருக்கிறது
என்றாய்
ஒன்றே ஒன்று என்று
நான் செய்கை செய்ய
வேண்டாமென்று என்னருகில் வந்தாய்
என் தொலைகாட்சி சில நேரங்களில்
தொலைவில் இருந்து வந்து
அருகிலும் காட்சி தரும் 
அருங்காட்சியென்று 
அருகில் வந்த 
உன்னை அணைத்தபடி
நான் சொல்ல...
நீயோ என்னை விலக்கிவிட்டு
போதும் இத்துடன் உங்கள்
தொலைகாட்சியில் இன்றைய
நிகழ்ச்சிகள் முடிவடைந்தன
மீண்டும் நாளைத் தொடரும்
என்றாய்



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts