10.02.2012

காந்தி கணக்கு : தமிழர்களின் துரோகச் செயல்(தெளிவான விளக்கம்)


காந்தி கணக்கு” தமிழ்நாட்டில் பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று காலை ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேசினார்.
       அதில் காந்தி கணக்கு என்ற வார்த்தை எப்படி வந்தது என்ற வரலாற்றைச் சொன்னார். பெரும்பாலும் திரும்ப வராத, ஏமாற்றப்பட்ட கணக்குகளையே காந்தி கணக்கில் எழுது என்று சொல்லும் வழக்கம் தமிழர்களிடையே பரவி  இருக்கிறது.
       இந்த வழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தானா … பிற மாநிலங்களிலும்  இருக்கிறதா ? என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த காந்தி கணக்கு என்ற சொல்வழக்கு பரவியிருக்கிறது.
       ஒரு நேர்மையான மனிதரைப் பற்றி இப்படி ஒரு வழக்கம் நிலவுவதை எண்ணி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். இருப்பினும் இந்த வார்த்தை தோன்றிய விதம் தமிழ்நாட்டில் வேறு விதமாகவே உள்ளது.
       இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் இருந்த காலக்கட்டங்களில் பல நிறுவனங்களின் கணக்குகளில்  குளறுபடிகள் வரும் பொழுதெல்லாம், அந்த தொகையை சரி செய்ய “ மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்திற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது என்ற கணக்கில் சேர்த்துவிடுவார்களாம். அது மருவி காந்தி கணக்கு என்று மாறி இன்றும் தமிழ் மக்களிடம் பரவி வருகிறது.

       இந்த தலைப்பில் தமிழில் ஒரு திரைப்படம் வேறு வந்தது.பிறகு அந்த தலைப்பிற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை மகான் கணக்கு என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். காந்தி கணக்கு என்ற சொல்லிற்கு பின்னே தமிழர்களாகிய நம்முடைய தேச துரோகச் செயல் அப்படமாகத் தெரிவதை நம்மால் மறுக்க முடியாது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக உதவி செய்யவில்லையென்றாலும், நன்கொடை வழங்கவில்லையென்றாலும், கணக்கில் வராத தொகையையெல்லாம், காந்தியின் போராட்டக் கணக்கில் எழுதிய அந்த துரோகச் செயலை தமிழர்கள் செய்திருக்கிறார்கள் எனும் பொழுது உண்மையில் ஒரு தமிழனாக நான் தலைக் குனிகிறேன்.
       அதுவும் காந்தி கணக்கு என்ற வார்த்தையின் பிரபலம், ஒரு குறிப்பிட்ட தமிழர்களின் ஊழலைப் பறைச்சாற்றுவதாகவே உள்ளது. அந்தக் குறிப்பிட்ட தமிழர்களின் இழிவான செயலால், ஓட்டு மொத்த தமிழர்களின் முகமாகவும் இது இன்று மாறியுள்ளது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுடைய சொத்தையெல்லாம் விற்று கப்பலோட்டியவரும், தமிழர்களாகிய நம் தன்மானத்தைத் தூக்கி நிறுத்தியவருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் தான் இப்படி சில ஊழல்காரர்களும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது, மனது வலிக்கிறது.
       அது மட்டுமின்றி அதை ஏற்கும் விதத்தில் நாமும் தெரிந்தோ தெரியாமலோ இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எத்தனைப் பெரிய இழிவான செயல். தமிழர்களின் நகைச்சுவை சிந்தனை ஒரு மகாத்மாவையே இழிவுப்படுத்தும் அளவு கேவலமாகப் போனது எதனால்…?
       சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட நாட்டிற்காக கொடுக்கும் கொடையில் தப்பானக் கணக்கை காட்டி அதை காந்தியின் பெயரிலேயே எழுதும் போக்கு எப்படி நம் தமிழர்களுக்கு வந்தது. இன்று இந்திய அரசாங்கம் எதற்கும் எங்களுக்கு உதவவில்லை, என்று கொடித் தூக்கும் பேச்சளவு தமிழர்கள், சுதந்திர வரலாற்றின் ஏடுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பக்கத்து நாட்டு விடுதலைக்காக சீறி எழும் தமிழ் வீரர்கள், நம் தேச விடுதலைக்காக நாம் ஆற்றிய ஊழல் பணியை திரும்பிப் பார்த்தால், நாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்று, தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும் வெட்கப்பட்டு, மனிதன் என்று சொல்லிக் கொள்ளவும் திரானியற்று தான் இருப்போம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

  தமிழகத்தில் தியாகம் ஒளிவிட்ட காலக்கட்டத்திலேயே, நம் தேசத்திற்காக கொடுத்த கொடையில், இப்படியொரு ஊழல் இருந்திருக்கிறதே…

       இன்றோ சுயநலத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழகத்தில் ஒவ்வொரு நன்கொடையிலும், திட்டத்திலும் எத்தனை ஊழல் நடந்துக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே...
வறுமை எனபது வன்முறையின் மோசமான ஒரு முகம் என்று சொன்னார் காந்தி.  இந்தியாவின் வறுமைக்கு முக்கிய காரணமே ஊழல் தான். அந்த ஊழலின் முதல் படி தமிழகத்தில் காந்தியின் பேரிலேயே ஆரம்பித்திருக்கிறது என்பதை நாம் ஆதரிக்கலாமா…?
       தமிழர்களாகிய நாம் ஊழலைத் தடுக்க முடியவில்லையென்றாலும், இந்த வார்த்தையின் பிரயோகத்தையாவது தடுக்கலாம் இல்லையா…?
       நாம் தமிழர்கள் என்பது உண்மையென்றால், இந்த வார்த்தையை நிச்சயம் நம் சூழலில் இருந்து ஒழித்தே ஆக வேண்டும். இது மகாத்மாவிற்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய மதிப்பு மட்டுமின்றி, நம் வருங்கால தலைமுறையினர் ஊழலை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையும் தான்.
இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை வருங்கால தலைமுறையினர் எண்ணி அதிசயப்படுவர், அது மட்டுமின்றி அதை நம்புவது அவர்களுக்கு கடினமாக இருக்கும் “ என்று காந்தியின் மறைவில் ஒரு புகழ்ப் பெற்ற மாமனிதர் சொன்னார்.
       ஆம் அவரின் வாழ்க்கை அப்படியொரு எளிமையானது. நம் கற்பனைக்குள் எளிதில் அகப்படாதது. அவர் தோன்றிய இந்நாளில் தமிழர்களாகிய நாம் இந்த ஊழல் வார்த்தையை நம்மிடையே இருந்து அகற்றுவதை கடமையாகக் கொள்வோம்.தமிழன் மேலுள்ள கரையை அகற்றுவோம். விரைவில் வார்த்தையில் மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறையும் என்பதில் நம்பிக்கை வைப்போம்
      
      



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9.28.2012

இயற்கையின் மாற்றமும் அமைதியும் (ஆராய்ச்சி 1)



             நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவது போல் ஒரு உணர்வு. எழுத்துக்கு என்றுமே நான் அடிமை. எழுதுவது என்றுமே எனக்கு பிடித்த விசயம். அதற்கு இந்த நொடி வாசகர்களாகிய  நீங்கள் உதவியாக இருக்கிறீர்கள்.எழுதுவதை யாரேனும் படிக்க வேண்டுமே...

9.25.2012

இயற்கையின் மெல்லிய அசைவுகளில்




கண்களை மூட கடினப்பட்டு
சோர்ந்திருந்த வேளையில்
உதடுகள் திறப்பதே
அரிதாகிவிட்ட நொடிகளில்
செவிகள் மட்டும் எதையோ
கேட்கத் துடிக்கும்

9.21.2012

வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா (அரசியல் தலைவர்)




இணையத்தில் வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் பிரபலமடைந்து அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்,சமூகம் சார்ந்த உறுப்பினர்களும் எப்படிப் பார்க்கிறார்கள். அதை தங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் கருதும் அவர்களுடையை மனநிலையை நகைச்சுவையோடு சொல்லலாம் என்ற சிறு முயற்சியே இந்த பதிவு. முதல் முயற்சியும் கூட…
கட்சி தொண்டர் :  தலைவரே இந்த வலைப்பதிவர்கள் தொல்லை தாங்க முடியலை. எதுன்னாலும் எழுதிபுடறாங்க… பத்திரிக்கைல வர்றதுக்குள்ள் நம்மள வறுத்தெடுத்துப் புடறாங்க…

9.19.2012

காதலும் கடவுளும்

       மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது... இது அடிக்கடி நிறைய காதலர்கள் மத்தியில் உச்சரிக்கப்படும் ஒரு வாசகம் தான். காதலர்கள் யாரிடம் கேட்டாலும் எங்களின் காதல் புனிதமானது என்று தான் சொல்கின்றனர். பிறகு சில வருடங்களிலோ,மாதங்களிலோ,வாரங்களிலோ, நாட்களிலோ காதல் தன் புனிதத்தை அவர்களிடன் இழந்துவிடுகிறது. அதே காதலர்களை கேட்டால், காதல் எல்லாம் வெறும் மாயை என்று சொல்கின்றனர்.

9.16.2012

சித்திரப் பெண்ணழகே !


சித்திரப்  பெண்ணழகே ! உன்னை
என்  சிந்தையில்  வைத்திடவே
கண்மலர் பூத்தி டம்மா  பாவையே
பார்வை  ஒருங்கிடவே

என்னையே  மனதில்  வைத்தாய்
என்னுடன்  நினைவையும் 
சேர்த்து  வைத்தாய்
கண்ணிலே  காதலையே  கன்னியே
என்னுள்  ஏன்  வைத்தா

9.15.2012

என் உதிரம் கலந்த நன்றி உனக்கு...



மேகம் துடைத்து

மழைத்துளியாய்

கருங்கூந்தலை நனைத்து…

துளி மணலில் கலந்து

பாதங்களை தடவும் நீர்த்துளியே…

கோடான கோடி நன்றிகள் உனக்கு…

என்னவளின் குடைக்குள் செல்ல

உதவியதற்கு…

Popular Posts