என்னுடைய வலைத்தளத்தில் நான் வேறு தளத்தில் இருந்துப் பகிர்ந்துக் கொள்ளும் பதிவுகளில் இதுவும் ஒன்று. சிலப் பதிவுகள் மக்களை, குறிப்பாக தமிழக மக்களை சென்றடைய வேண்டும் என்பதால் இந்த பதிவுகளை நான் பகிர்ந்துக் கொள்கிறேன். இது உலக மக்கள் தமிழர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் முயற்சி அல்ல. நாம் நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்யினாலே இப்பகிர்வு.
11.09.2012
11.06.2012
இரசித்த நூல்கள்: காதலில் துயரம் - கதே
நீண்ட நாட்களாக நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பற்றி பதிவிட வேண்டும்
என்ற ஆவல் எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான சரியான நேரம் எனக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில்
நான் படித்த கதேயின் காதலின் துயரம் என்னை அதற்கான நேரத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது
என்று தான் சொல்ல வேண்டும். எனவே தான் அதற்கு ”ரசித்த நூல்கள்” என்ற தலைப்பிட்டு படித்த
புத்தகங்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். அதில் முதலில் நான் எழுதப் போவது கதேயின்”
காதலின் துயரம்” தமிழாக்கம் எம். கோபாலகிருஷ்ணன்.
11.05.2012
ராமரும்,நபிகளும் : மதநல்லிணக்கம்
சமீபத்தில் தொலைக்காட்சியில்
இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் பேசியதையே இங்கு உங்களிடம் நான்
பகிர்ந்துக் கொள்கிறேன்
மதம், மனங்களிலுள்ள அறியாமையை பக்தி என்னும் ஒளியால் அகற்றவே உலகில்
பல மதங்கள் தோன்றியிருக்கின்றது. அதைப் பற்றி கடந்த சனிக்கிழமையன்று சுகிசிவம் அவர்கள்
பேசுகையில் அருமையான ஒரு தகவலை சொன்னார்.
11.01.2012
இனி இனிக்கும்
மனதிலிருந்து எந்த நினைவுகளையும்
அழித்துவிட முடியாது
என்று சாலையைக் கடக்கையில்
உன்னைக் கணடதும்
தான் தோன்றியது.
இரண்டு வருடங்களுக்கு முன்
இதே சாலையில் கைக்கோர்த்தபடி
நடந்த அந்த இரு உருவங்கள்
பளிச்சென மின்னல் போல்
என் மனக்கண் முன் வந்துப் போனது
அதே உருவங்கள் தான் இன்றும்
வேறு ஒரு பரிமாணத்தில் மாறி
உலகில் உலவிக் கொண்டிருப்பதாய்
எனக்கு எண்ணத் தோன்றியது.
என் சிந்தனையை சட்டென
உனதுப் பார்வை கலைத்துப் போட்டது.
நீ என்னைப்
பார்த்தப் பார்வையில்
உன்னைப் பற்றிய எந்த உணர்வும்
வெளிப்பட்டுவிடக் கூடாதே என்ற
அச்சஉணர்வு உனக்கிருப்பதை
என்னால் உணர முடிந்தது.
அந்தப் பார்வையை விலக்காமல்
என்னருகில் வந்து
நின்றாய்
பழைய நினைவுகளின்
எந்த சுவடுமின்றி
நிகழ்வில் ஒரு வார்த்தையை
பிரயோகிப்பது எத்தனை கடினம்
என்பதை அந்நொடி தான் உணர்ந்தேன்
ஏனெனில் அந்த முயற்சியில்
நானும் தோற்றேன் நீயும் தோற்றாய்
உனது விழியும் எனது விழியும்
சந்தித்துக் கொண்ட அந்த தருணம்
மட்டும் எதுவும் பேசாமல்,
எதையும் கேட்காமல் அந்த நொடிகள்
கடந்துவிடக் கூடாதாயென்று
மனம் துடித்தது.
வாகனங்களின் சத்தத்திலும்
உனது சுவாசக்காற்றின் துடிப்பை
என்னால் உணர முடிந்தது.
என்ன தான் நாம் பேசிவிட முடியும்
என்றெண்ணுகையில் தான்
எதிர்ப்பார்க்காத ஒரு கேள்வியை
கேட்டாய் நீ
நல்லாயிருக்கீங்களா…?
வேண்டாம் நான் பொய்
சொல்ல மாட்டேன் என்றதுக்கு
எனக்கு வரும் என்று
சொன்ன நீ
நல்லாயிருக்கிறேன்
உன் நினைவுகள் இல்லாமல்
உன் கனவுகளும் இல்லாமல்
யாருடனோ எங்கையோ
என்றாய்…
மனதின் ஒட்டு மொத்த வலிகளும்
ஒரு வரியில் சரியாகி விட முடியுமா…?
என் விழிகள் அவளின் விழிகளை
நேருக்கு நேர் சந்தித்தது
கண்ணீர் மலர்கள் அவள் விழிகளில்
மலர்ந்து கன்னத்தின் வழியே
உதிர்ந்துக் கொண்டிருந்தது.
அந்த சாலையின் ஓரத்தில்
உன் கரங்களைப் பற்றி
உண்மை சொல்லட்டுமா என்றேன்
நீயும் தலையை ஆட்டினாய்
எனக்கு சர்க்கரை இனித்து
இரண்டு வருடமாகிறது. என்றதும்
நீ லேசாக நகைத்தாய்
உன் கரங்கள் என் கரத்தை
அழுத்தமாய் பற்றியது
இனி இனிக்கும் என்று
கன்னத்தில் இருந்த ஈரத்தைத்
துடைத்தபடியே சொன்னாய் நீ
நட்புடன்
தமிழ்ராஜா
10.30.2012
பீட்சா : துணிச்சலான பயமுறுத்தல்
நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்த்துவிட்டேன். இருப்பினும்
அதைப் பற்றி எழுத இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. அதான் ஒரு வாராமா நிறைய படித்துவிட்டோமே
நீ என்ன மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு இங்கே நான் சொல்லிக்
கொள்வது இது விமர்சனமல்ல… இது ஒரு விவாதம்.
10.24.2012
10.21.2012
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும் அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன் நொடிக் கொரு முறை என் சலனத்தை நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன் ...
-
முதல் முறையாக என் வலைத்தளத்தில் வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியை பதிவிடுகிறேன். ஏனெனில் இது அனைவரும் அறிந்துக் கொள்ளக் க...
-
இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன....





